விளையாட்டு

"ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணியை கடுமையாக பாதிக்கும்" - எச்சரிக்கை விடுத்த தினேஷ் கார்த்திக் !

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணியை பாதிக்கும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

"ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணியை கடுமையாக பாதிக்கும்" - எச்சரிக்கை விடுத்த தினேஷ் கார்த்திக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் ஆசிய கோப்பை தொடரில் வென்று இந்தியா இன்னும் வலுவான அணியாக காட்சியளிக்கிறது. அதே நேரம் இந்திய அணியில் பின்வரிசை வீரர்கள் பேட்டிங் செய்ய முடியாமல் விரைவு கதியில் ஆட்டமிழப்பதும், பேட்ஸ்மேன்கள் பந்துவீச முடியாமல் இருப்பதால் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

"ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணியை கடுமையாக பாதிக்கும்" - எச்சரிக்கை விடுத்த தினேஷ் கார்த்திக் !

இந்த நிலையில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜடேஜா தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்வது இந்திய அணியை பாதிக்கும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா தம்முடைய பேட்டிங்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். ஆனால், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரின் பேட்டிங் சுமாராகவே இருக்கிறது. 2013 சாம்பியன் டிராபி போல அவர் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் இந்தியா அந்த தொடரில் வெற்றியைப் பெற்று வருகிறது.

ஆகவே, அவர் சிறப்பாக செயல்படுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் பந்து வீச்சில் அசத்தவில்லை என்றாலும் அவருடைய பேட்டிங்கால் இந்தியா வெற்றி காண முடியும். இது போக அக்சர் படேல், ஜடேஜா இருவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பது மற்றும் ஒரு கவலையளிக்கும் விஷயமாகும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories