விளையாட்டு

"இந்திய அணி மிக சாதாரண அணியாக, எளிதில் வீழும் அணியாக மாறியுள்ளது" முன்னாள் வீரர் விமர்சனம் !

கடந்த சில வருடங்களாக எளிதாக வீழ்த்தி விட கூடிய மிக மிக சாதாரண அணியாக இந்திய அணி மாறியுள்ளது என இந்திய அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

"இந்திய அணி மிக சாதாரண அணியாக, எளிதில் வீழும் அணியாக மாறியுள்ளது" முன்னாள் வீரர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. ஆனால் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

அதிலும், எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் கூட இறுதிக்கட்டத்தில் இந்திய அணி மோசமாக செயல்பட்டது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் மோசமான பேட்டிங் ஆர்டரே காரணமாக கூறப்பட்டது. இளம்வீரர்கள் தொடர்ந்து சொதப்பினர்.

அதே நேரம் கீழ்வரிசையில் பேட்டிங் செய்த ஆள் இல்லாததும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் நடுவரிசை வீரர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு அவர்கள் எளிதாக தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

"இந்திய அணி மிக சாதாரண அணியாக, எளிதில் வீழும் அணியாக மாறியுள்ளது" முன்னாள் வீரர் விமர்சனம் !

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக எளிதாக வீழ்த்தி விட கூடிய மிக மிக சாதாரண அணியாக இந்திய அணி மாறியுள்ளது என இந்திய அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணி ஒரு நாள் உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெற தவறிய மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. அதற்கு முன்னர் வங்கதேசத்திடம் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. இதன் மூலம் கடந்த சில காலமாக ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் எளிதாக வீழ்த்தி விட கூடிய மிக மிக சாதாரண அணியாக இந்தியா மாறியுள்ளது.

இதற்கு ஏதேனும் அறிக்கை விடுவதற்கு பதிலாக, அணி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். வீரர்களிடம் முன்பிருந்த வெற்றிக்கான வேட்கை, தீவிரத்தன்மை இருப்பதாக தெரியவில்லை. அணியினர் கற்பனை உலகில் இருப்பதாக தெரிகிறது. ஹர்திக் பாண்டியா தெளிவான திட்டத்துடன் இருப்பதாக தெரியவில்லை. பிடித்த நபரை அணியில் வைத்திருப்பது சரியல்லை"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories