விளையாட்டு

"காத்திருந்தால் ஒருநாள் வாய்ப்பு வழங்கப்படும்” -சர்ஃப்ராஸ் கான் குறித்த கேள்வுக்கு ரோஹித் சர்மா பதில் !

எல்லா வீரர்களுக்கும் ஒருநாள் அவர்களுக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

"காத்திருந்தால் ஒருநாள் வாய்ப்பு வழங்கப்படும்” -சர்ஃப்ராஸ் கான் குறித்த கேள்வுக்கு ரோஹித் சர்மா  பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை இந்திய அணிக்கு தேர்வாகும் முக்கியத் தொடராக இருந்தது. ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறித்து. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83. இது கிரிக்கெட்டின் ஆகப்பெரும் ஜாம்பவான்களே தொடமுடியாத இடம்.

ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.

"காத்திருந்தால் ஒருநாள் வாய்ப்பு வழங்கப்படும்” -சர்ஃப்ராஸ் கான் குறித்த கேள்வுக்கு ரோஹித் சர்மா  பதில் !

தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் கூட சர்ஃப்ராஸ் கானுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. இதனைக் குறிப்பிட்டு பல்வேறு தரப்பினர் தேர்வு குழுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், மேற்கிந்திய தீவில் முதல் போட்டி துவங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் ஷர்மாவிடம் சர்ஃபராஸ் கான் மற்றும் ரிங்கு சிங்கிற்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "இந்த டெஸ்ட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ருத்துராஜ், ஜெய்ஸ்வால் இருவரும் உள்நாட்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகவும் அபாரமாக செயல்பட்டதால் இந்திய அணியில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக அணியில் 15-16 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் எல்லா வீரர்களுக்கும் ஒருநாள் அவர்களுக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ஆகவே ரிங்கு சிங், சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு, அவர்களுக்கான நேரம் வரும்போது நிச்சயம் அணியில் வாய்ப்புகள் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories