விளையாட்டு

வெளிநாடு சென்று நடுரோட்டில் படுத்துக்கிடந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்.. வைரலான புகைப்படத்தால் அதிர்ச்சி!

வெளிநாடு சென்று நடுரோட்டில் படுத்துக்கிடந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்.. வைரலான புகைப்படத்தால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வரும் அக்டோபர் மாதம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில்,இதற்கான. தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இலங்கை அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியோடு தகுதி சுற்று போட்டியில் ஆடவுள்ளது.

இதற்காக இலங்கை அணி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜிம்பாப்வே சென்ற நிலையில், அங்கு அந்த அணி வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்களுக்கு அறை காலியாக இல்லாததால் காத்திருக்க கூறியுள்ளனர்.

இதனால் இலங்கை சர்வதேச அணி வீரர்கள் ஹோட்டலுக்கு முன் தரையில் அமர்ந்தும், படுத்தும் ஓய்வெடுத்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்துக்கு பின்னர் வீரர்களுக்கான அறை உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் அறைக்கு திரும்பியுள்ளனர்.

வெளிநாடு சென்று நடுரோட்டில் படுத்துக்கிடந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்.. வைரலான புகைப்படத்தால் அதிர்ச்சி!

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இலங்கையில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அணி வீரர்கள் விவகாரத்தில் இப்படி ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இவ்வாறு அஜாக்கிரதையாக இருந்திருக்க கூடாது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், " இலங்கை அணி வீரர்கள் புலவாயோவில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது,மற்றொரு தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் செக் இன் செய்துகொண்டிருந்ததால் இலங்கை வீரர்களை செக் இன் செய்வதற்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது. பின் ஹோட்டல் நிர்வாகத்திடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்த பின்னர், குறுகிய காலத்திற்குள் பிரச்னை சரி செய்துவிடப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories