தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இறுதிப்போட்டி உட்பட 32 போட்டிகள் நடைபெறுகிறது.
ஐபிஎல் போன்று இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டிகளிலும் டி.ஆர்.எஸ் முறை, இம்பேக்ட் பிளேயர், ரிசர்வ் பிளேயர், ரிசர்வ் டே வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் டிஜிட்டல் தளத்திலும் இந்த ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஏழாவது சீசன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர் என் பாபா "தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் ஏழாவது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இந்த ஆண்டு பாலிசி திருச்சி அணி என்ற பெயருடன் போட்டிகளில் பங்கேற்கும்.
கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, ஆகிய நான்கு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டி நெல்லையில் நடைபெறுகிறது சென்னையில் இறுதிப்போட்டியில் நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டது ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பணிகள் ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்ற பின் தொடங்க உள்ளதால் நெல்லையில் இந்த ஆண்டு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது விளையாட்டுப் போட்டிகளை காண டிக்கெட் விலை ரூபாய் 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் அதிகமான டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்பு உள்ள போட்டியாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் திகழ்கிறது கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை போல் இம்பேக்ட் பிளேயர், ரிசர்வ் பிளேயர், போன்றவை அறிமுகம் செய்யப்படுகிறது .ரிசர்வ் டே வழிமுறையும் இந்த ஆண்டு முதல் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை டி.ஆர்.எஸ் நடைமுறையும் அறிமுகம் செய்யப்படுகிறது" என தெரிவித்தார்