உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாடுகளின் வீரர்களும் பங்கேற்றுவரும் நிலையில், இந்திய வீரர்களை பிற நாட்டு லீக் தொடர்களின் ஆட பிசிசிஐ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை விட ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல் சிறந்த தொடர் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் ஒன்றுக்கு பேட்டியளித்த பாபர் அசாமிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது, எனவே அங்குள்ள மாற்று சூழலில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அதனால் ஐபிஎல் தொடரை விட ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல் சிறந்த தொடர் என்று கூறலாம்" என்று கூறியுள்ளார்.