விளையாட்டு

2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய 7 கேப்டன்கள்: இந்திய அணியின் பலமா? பலவீனமா?

2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்கு 7 கேப்டன்கள் தலைமை தாங்கியுள்ளனர்.

2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய 7 கேப்டன்கள்: இந்திய அணியின் பலமா? பலவீனமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சௌரவ் கங்குலிக்கு அடுத்து, இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியவர் என்றால் அது கேப்டன் தோனிதான். தோனி கேப்டனாக இருந்த காலத்தை இந்திய அணிக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். ஏன் என்றால் இவர் தலைமையில்தான் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை என அனைத்து கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது.

மேலும் பல நெருக்கடியான போட்டிகளின் போது தனது ஆலோசனையால் இந்திய அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளார் தோனி. இதனால்தான் இந்திய வீரர்களை விட மற்ற அணி வீரர்களுக்கு தோனி பிடித்திருக்கிறது. இவர் விளையாடவில்லை என்றாலும் கூட கேப்டனாக இருந்தே அந்த போட்டியில் வெற்றிபெற வைப்பார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மனதில் ஆழமாக விதைத்துள்ளார்.

2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய 7 கேப்டன்கள்: இந்திய அணியின் பலமா? பலவீனமா?

பின்னர் இந்திய அணியிலிருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு மூன்று விதமான போட்டிக்கும் விராட் கோலி கேப்டன் பொறுப்பு ஏற்றார். ஆனால் இவரால் தோனி போல் செயல்பட முடியவில்லை. இவரின் கோபமே இவருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டது. கடும் அழுத்தத்திற்கு பிறகு மூன்று விதமான போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகினார். இதனால் இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக தலைமை ஏற்றார்.

2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய 7 கேப்டன்கள்: இந்திய அணியின் பலமா? பலவீனமா?

இவரின் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை விளையாடியது. ஆனால் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு தொடரிலும் இந்திய அணி தோற்றது. இதற்கான பல காரணங்களில் வலுவான தலைமை இல்லை என்ற காரணமும் ஒன்று.

மேலும் ரோகித் ஷர்மாவின் உடல்நிலை காரணத்தால் இந்திய அணி விளையாடிய 72 போட்டிகளில் இவரால் வெறும் 39 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. இதன் காரணமாக இந்திய அணிக்கு ரிஷப் பண்ட், பும்ரா, ஷிகர் தவான், ஹர்த்திக் பாண்டியா, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் கேப்டனாக இருந்து செயல்பட்டனர்.

2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய 7 கேப்டன்கள்: இந்திய அணியின் பலமா? பலவீனமா?

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்றதில் இருந்து டி20 போட்டிகளுக்கு மட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டான தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் ரோகித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அதேநேரம் மூன்று விதமான போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் இருப்பதால் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கிறது. எனவே மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று கேப்டன்கள் இருக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்து வருகிறது.

2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய 7 கேப்டன்கள்: இந்திய அணியின் பலமா? பலவீனமா?

இந்த ஆண்டு இந்திய அணிக்கு 7 கேப்டன்கள் தலைமை தாங்கியதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் இந்த 7 கேப்டன்கள் செயல்பட்டும் இந்திய அணிக்கு ஒரு மோசமான ஆண்டாகவே இருந்துள்ளது. மேலும் இந்திய அணியின் பலவீனத்தையே இது காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories