கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரை நோக்கியே இருக்கிறது.
இந்நிலையில் நேற்றைய லீக் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில் நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி எளிதாக ஜப்பான் அணியை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு ஏற்றார் போலவே 32வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஜெர்மனி தனது முதல் கோலை அடித்தது. பிறகு ஜப்பான் எவ்வளவு முயற்சி செய்தும் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் ஜப்பன் ரசிகர்கள் கவலையிலிருந்தனர்.
பிறகு ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய நில நிமிடத்திலேயே ஜப்பான் அணி அடுத்தடுத்து 2 கோல் அடுத்து ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் ஆட்ட முடிவில் ஜப்பான் அணி 1-2 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ஜப்பான் ரசிகர்கள் ஆராவாரத்தோடு கொண்டாடினர். மேலும் மைதானத்திலிருந்த ரசிகர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கொண்டாட்டத்திலும் ஜப்பான் ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டை ஜப்பான் ரசிகர்கள் பெற்று வருகின்றனர். FIFAவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'ஜப்பானிய ரசிகர்களுக்கு மகத்தான மரியாதை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி உலக மக்களின் இதயத்தில் ஜப்பான் இடம் பெற்றுவிட்டது என்றால் அதுமிகையல்ல.