விளையாட்டு

" இரு இந்திய அணியை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது" - அனில் கும்ப்ளே கூறிய வித்தியாசமாக ஐடியா என்ன ?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இந்தியாவுக்கு தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

" இரு இந்திய அணியை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது" - அனில் கும்ப்ளே கூறிய வித்தியாசமாக ஐடியா என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல அடிலைட்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

" இரு இந்திய அணியை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது" - அனில் கும்ப்ளே கூறிய வித்தியாசமாக ஐடியா என்ன ?

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொடர் தொடங்கும் முன்னர் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி கருதப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக பலரும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.

" இரு இந்திய அணியை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது" - அனில் கும்ப்ளே கூறிய வித்தியாசமாக ஐடியா என்ன ?

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இந்தியாவுக்கு தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், "இந்திய அணியை டி20, ஒருநாள் போட்டிகளுக்குத் தனி அணியாகவும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தனி அணியாகவும் உருவாக்க வேண்டும். சில முக்கிய வீரர்களை தவிர மற்றவர்களை பிரத்யேகமாக அந்தந்த போட்டிகளுக்கு என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆட வைத்தால், அவர்கள் ஆடமாட்டேன் என்று மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு அது வேலைப்பளுவை அதிகரிக்கும். இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதால் அது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. உலகக் கோப்பையில் ஏற்பட்ட இந்த தோல்வி ஒரு பாடமாக அணி நிர்வாகத்துக்கு அமையட்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories