விளையாட்டு

"ரோகித் ஷர்மா, கோலிக்கு இவர்கள் என்றால் எப்போதும் தடுமாற்றம்தான்" - முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் காட்டம்!

ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு இவர்கள் எப்போதும் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறிவருகின்றனர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

"ரோகித் ஷர்மா, கோலிக்கு இவர்கள் என்றால் எப்போதும் தடுமாற்றம்தான்" -  முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடச் சென்றிருக்கிறது. பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், மற்ற இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை சமீபத்தில் வென்ற இந்திய அணி, கேப்டன் ரோஹித் ஷர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது. இந்த அணியை சீனியர் ஓப்பனர் ஷிகர் தவான் வழிநடத்த இருக்கிறார்.

ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் தொடர்ந்து பெரிய ஸ்கோர் அடிக்கத் தடுமாறினாலும், ஒரு இன்னிங்ஸ் அவர்களின் ஃபார்மை அப்படியே மாற்றிவிடும். அடிக்கும் முப்பதுகளை பெரிய ஸ்கோர்களாக மாற்ற ரோஹித் ஷர்மா தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஓரளவு சுமாரான ஸ்கோர் அடிக்கக் கூடிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் கோலி. அவர் கடைசியாக இந்திய அணிக்கு சர்வதேசப் போட்டி ஒன்றில் சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.

"ரோகித் ஷர்மா, கோலிக்கு இவர்கள் என்றால் எப்போதும் தடுமாற்றம்தான்" -  முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் காட்டம்!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் கோலி, ரோஹித் ஷர்மா இருவருமே ரீஸ் டோப்ளியின் பந்துவீச்சில் மிகவும் திணறினார்கள். விளையாடிய 3 போட்டிகளில் ரோஹித் ஷர்மாவை 2 முறையும், கோலியை ஒரு முறையும் அவுட் ஆக்கினார் டோப்ளி. இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் ஒன்று தான். இது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிக்கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக்.

"டேவிட் வில்லி பந்துவீச்சுக்கு எதிராக ஆடும்போது ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் எவ்வளவு வந்து ஆட முடியுமோ அந்த அளவுக்கு வருகிறார்கள். அவர் பந்துவீச்சை எளிதாக டிரைவ் செய்கிறார்கள். ஆனால் டோப்ளி வில்லி அளவுக்கு பந்தை இன் ஸ்விங் செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் கூடுதல் பௌன்ஸும் ஏற்படுத்துகிறார். அப்படி உள்ளே வராத பந்துகளை உடலுக்கு வெளியே ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது" என்று தன்னுடைய யூ டியூப் சேனலில் பேசியிருக்கிறார் பிராட் ஹாக்.

"ரோகித் ஷர்மா, கோலிக்கு இவர்கள் என்றால் எப்போதும் தடுமாற்றம்தான்" -  முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் காட்டம்!

"முந்தைய ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பல ஆப்ஷன்கள் இருந்தன. அதில் ஒருவருக்கு எதிராக ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவருமே தடுமாறினர். இந்தத் தொடருக்கு அதுதான் விதையாக அமைந்தது" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ரீஸ் டோப்ளி மட்டுமல்ல, டேவிட் வில்லி கூட இந்தத் தொடரில் விராட் கோலியை திணறடித்தார். நல்ல லென்த்தில் பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முற்பட்டு டேவிட் வில்லியின் பந்துவீச்சில் இரண்டு முறை ஆட்டம் இழந்தார் விராட் கோலி. ஒரு முறை சர்வதேச டி20 தொடரிலும், ஒரு முறை ஒருநாள் தொடரிலும்.

"டேவிட் வில்லி, ரீஸ் டோப்ளி இருவரும் இணைந்து ஒரு அற்புதமான கூட்டணியை அமைத்திருக்கின்றனர். முதலாவது அவர்கள் இருவரிடமும் உயரத்தில் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. டேவிட் வில்லியை விட ரீஸ் டோப்ளி சற்று உயரமாக இருக்கிறார். இருந்தாலும், டோப்ளியை விட அதிகமாக பந்தை ஸ்விங் செய்கிறார் வில்லி" என்றும் அந்த பௌலிங் கூட்டணியைப் பற்றி பெருமையாகப் பேசியிருக்கிறார் பிராட் ஹாக்.

banner

Related Stories

Related Stories