விளையாட்டு

“13 போட்டிகளில் 393 ரன்கள்.. 164 ஸ்ட்ரைக் ரேட்டிங்” : அதிகம் கொண்டாடப்படாத வெற்றி வீரன் ராகுல் திரிபாதி!

ஓப்பனிங் கூட்டணி ஏற்படுத்தாத தாக்கத்தை நம்பர் 3 இல் வந்த ராகுல் திரிபாதி ஏற்படுத்தினார். 44 பந்துகளில் 76 ரன்களை அடித்திருந்தார்.

“13 போட்டிகளில் 393 ரன்கள்.. 164 ஸ்ட்ரைக் ரேட்டிங்” : அதிகம் கொண்டாடப்படாத வெற்றி வீரன் ராகுல் திரிபாதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று நடந்திருந்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்ந்தது. இந்த வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் அணி இன்னமும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்கிறது.

சன்ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ராகுல் திரிபாதியே. சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 193 ரன்களை எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் அணியில் வழக்கமாக வில்லியம்சனும் அபிஷேக் சர்மாவுமே ஓப்பனர்களாக இறங்குவார்கள்.

ஆனால், கடந்த சில போட்டிகளில் வில்லியம்சன் கடுமையாக சொதப்பியதால் இந்த போட்டியில் வில்லியம்சன் ஓப்பனிங் இறங்கவில்லை. வில்லியம்சனுக்கு பதில் பிரியம் கர்க் ஓப்பனிங் இறங்கியிருந்தார். புதிய கூட்டணியான இவர்களிடமும் எதிர்பார்த்த தாக்கம் கிடைக்கவில்லை. இந்த கூட்டணி 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அபிஷேக் சர்மா 9 ரன்களில் சாம்ஸின் ஓவரில் அவுட் ஆகியிருந்தார்.

ஓப்பனிங் கூட்டணி ஏற்படுத்தாத தாக்கத்தை நம்பர் 3 இல் வந்த ராகுல் திரிபாதி ஏற்படுத்தினார். 44 பந்துகளில் 76 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 172. 9 பவுண்டரிக்கள் மற்றும் 3 சிக்சர்களையும் அடித்திருந்தார். திரிபாதியின் இந்த அதிரடியான ஆட்டம்தான் சன்ரைசர்ஸை 193 ரன்களை எடுக்க வைத்தது.

“13 போட்டிகளில் 393 ரன்கள்.. 164 ஸ்ட்ரைக் ரேட்டிங்” : அதிகம் கொண்டாடப்படாத வெற்றி வீரன் ராகுல் திரிபாதி!

பும்ரா, மெரிடித், சாம்ஸ், சஞ்சய் யாதவ், மார்கண்டேயா என அத்தனை பௌலர்களுக்கும் எதிராக அடித்து வெளுத்தார். பவர்ப்ளேயில் பும்ரா வீசிய ஒரே ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிக்களை அடித்திருப்பார். இந்த போட்டியில் என்றில்லை. இந்த சீசன் முழுவதுமே திரிபாதி மிகச்சிறப்பாகவே ஆடி வருகிறார். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிக ரன்களை அடித்திருக்கும் வீரர் அவர்தான்.

13 போட்டிகளில் 393 ரன்களை அடித்திருக்கிறார். ஸ்பின்னர்களுக்கு 149 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 164 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். எந்த விதமான பந்துவீச்சுக்கும் பெரிதாக திணறுவதே இல்லை. க்ரீஸுக்குள் வந்ததிலிருந்து தங்கு தடையின்றி ஸ்கோர் செய்து கொண்டே இருப்பார். இவர் க்ரீஸில் இருக்கும் வரை சன்ரைசர்ஸ் அணிக்கு ரன்ரேட் அழுத்தம் என்பதே ஏற்படாது.

இந்த சீசனில் என்றில்லை. கடந்த சீசன்களில் கொல்கத்தா அணிக்காகவும் புனே அணிக்காகவுமே கூட மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். ஓப்பனிங்கிலிருந்து கீழ் வரிசை வரை எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கேற்ற வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டு மிகச்சிறப்பாக ஆட கடந்த சில சீசன்களாகவே அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.

“13 போட்டிகளில் 393 ரன்கள்.. 164 ஸ்ட்ரைக் ரேட்டிங்” : அதிகம் கொண்டாடப்படாத வெற்றி வீரன் ராகுல் திரிபாதி!

இந்த மாதிரியான வீரர்கள் ஒரே சீசனில் பிரபலமாகி ஒன் சீசன் வொண்டராக அடுத்த சீசனில் காணாமலும் போயிருக்கிறார்கள். சிலர் ஒரே சீசனில் பிரபலமாகி இந்திய அணிக்கும் ஆடியிருக்கிறார்கள். திரிபாதி இந்த இரண்டு வகைமைக்குள்ளும் வரமாட்டார். அவர் ஒன் சீசன் வொண்டராக சோடை போகவும் இல்லை.

மளமளவென முன்னேறி இந்திய அணிக்கும் ஆட வில்லை. பெரிதாக கொண்டாடப்படாத வீரராக அவர் வேலையை அவ்வளவு சிறப்பாக செய்து கொண்டே இருக்கிறார். நான்கைந்து சீசனாக சீராக பெர்ஃபார்ம் செய்து கொண்டே இருக்கிறார்.

'இந்திய அணியின் கதவுகளை அவர் ஓங்கி தட்டுகிறார்' என ஹர்ஷா போக்ளே திரிபாதி குறித்து பேசியிருக்கிறார். இந்த முறை அந்த கதவுகள் திறக்காமல் போகாது என்பதே அனைவரின் நம்பிக்கையும்.

banner

Related Stories

Related Stories