விளையாட்டு

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவாக CSK - குஜராத் அணி வீரர்கள் செய்த செயல்.. ட்விட்டரில் உருகிய IPL நிர்வாகம்!

சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவாக CSK - குஜராத் அணி வீரர்கள் செய்த செயல்.. ட்விட்டரில் உருகிய IPL நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டைகள் அணிந்து சிஎஸ்கே - குஜராத் அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் விளையாடியிருக்கிறார்கள்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

46 வயதான ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று இரவு (சனிக்கிழமை) கார் விபத்தில் பலியானார். இதையடுத்து, இன்று நடைபெற்ற போட்டியில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐ.பி.எல் நிர்வாகம், சைமண்ட்ஸ் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், போட்டிகளில் அவரை இழப்பதாகவும் பதிவிட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் ஐதராபாத்துக்கான டெக்கான் சார்ஜஸ் மற்றும் மும்பை அணிக்காக விளையாடியுள்ள சைமண்ட்ஸ், 2008ம் ஆண்டில் அறிமுக தொடரில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக 117 ரன்கள் விளாசியுள்ளதையும் நினைவூட்டியுள்ளது.

2003 மற்றும் 2007 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories