குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் களம் இறங்கிய கோலி முதல் பந்திலிருந்தே தனது பவுண்டரிகள் மூலம் பாசிட்டவான, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் கோலி கோலி என்று கூச்சலிட்டு அரங்கமே அதிரும்படி அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
அதன் பிறகு முகமது ஷமி பந்துவீச்சில் கிட்டதட்ட 14 இன்னிங்க்ஸ்களுக்கு பிறகு கோலி அரை சதம் அடித்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது பெருமூச்சு விட்ட முன்னாள் கேப்டன் கோலியின் தோளில் ஷமி கை வைத்து, அவரை பாராட்டியது காண்போரை கண்கலங்க செய்தது.
ஷமியின் அந்த செயல், "வெற்றியும், தோல்வியும் ஒரு வீரருக்கு பொதுவானது தான், எப்போதும் உன் பின்னால் நாங்கள் இருக்கிறோம்" என்பது போல் இருந்தது. 53 பந்துகளில் 58 ரன்கள் ( 4s- 6, 6s-1 ) எடுத்து ஷமியின் யார்க்கருக்கு தனது ஆட்டத்தை இழந்தார்.
இந்த போட்டியில் முகமது ஷமிக்கும் கோலிக்கும் இடையேயான நட்பு பெரும் பேசுபொருளாக மாறியதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
மிக மோசமான நாட்களில் ஷமிக்கு கைக் கொடுத்து, தோள் கொடுத்து தூக்கி விட்டது அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி தான். கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஷமி தனது மதத்தின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்களுக்கு ஆளானார்.
தேசபக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு மொத்த ஆத்திரத்தையும் அவர் மீது தனிமனித தாக்குதலாக நடத்தினார்கள். ஷமியின் மதம், குழந்தை, மனைவி, குடும்பம் என ஒட்டுமொத்தமாக அவரின் மேல் மிகப்பெரிய அளவில் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தனர். மென் இன் ப்ளூவின் அடுத்த ஆட்டத்திற்கு முன்பு கோலி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஷமிக்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார். மதத்தின் அடிப்படையில் ஒருவரைத் தாக்குவது ஒரு மனிதனால் செய்யக்கூடிய 'மிகவும் பரிதாபகரமான விஷயம்' என்று கூறிய அவர், இந்திய கிரிக்கெட்டுக்கு வேகப்பந்து வீச்சாளரின் பங்களிப்பை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.
அப்படியொரு சமயத்தில் கேப்டன் கோலி ஷமிக்கு ஆதரவாக கூறிய வார்த்தைகள் உலுக்க வேண்டியவர்களை உலுக்கிவிட்டது, என்று தான் சொல்ல வேண்டும். இதே ஷமி தான் பல வெற்றிகளை இந்தியாவிற்குப் பெற்று கொடுத்துள்ளார் என்றும் , இன்னும் பல வெற்றிகளை பெற்று கொடுத்தும் கொண்டிருக்கிறார். இந்த போட்டி உட்பட என்றும் கூறினார்.
முதல் இன்னிங்க்ஸில் 5Fer, டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் , இரண்டாவது இன்னிங்க்ஸில் முல்டருக்கு அற்புதமான seam பந்தில் வந்தவுடன் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். மற்ற பவுலர்கள் எல்லாம் Wobble or Scrambled Seam முயற்சி செய்து கொண்டிருக்கையில் ஷமி Orthodox seam பந்துகளை வீசி விக்கெட்டுகளை அள்ளிக்கொண்டிருக்கிறார். உலக அளவில் டாப் 3 சீம் பவுலர்களில் ஷமி இருக்கிறார் என்று கூறி கோலி பாராட்டினார்.
இந்திய அணியின் சமீபகால ஒவ்வொரு Fast பவுலர்களின் எழுச்சியிலும் கோலியின் பங்கு அளப்பறியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இஷான் ஷர்மா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி, நடராஜன், பிரசித் கிருஷ்ணா இப்படி பல Fast பெளலர்கள் பெயரை சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவை பொறுத்தவரை என்றும் Fast பவுலர்களின் கேப்டன் கோலி தான். அதனால் தான் கோலியின் அரை சதத்திற்கு பிறகு, ஷமி அவரை கட்டிப்பிடித்து பாராட்டியது எல்லோரின் இதயங்களையும் கவர்ந்தது. ஷமியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் அதிக இதயங்களை கவர்ந்து வருகிறது