The God Of Cricket என்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சினின் சாதனைகளை முறியடிப்பதற்காகவே இந்திய கிரிக்கெட் அணியில் உருவெடுத்தவர் என்ற பேருக்கு சொந்தக்காரர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி....
தகர்க்கவே முடியாது என்று நினைத்த பல சாதனைகளை அசாதாரணமாக நிகழ்த்தி காட்டியவர். U19 உலகக் கோப்பைக்கு பிறகிலிருந்து தற்போது வரை கோலியின் புகழ் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சி தான் உள்ளது.
Run Machine, Record Breaker, Worlds Best BatsMan, Cover Drive Specialist, Successfull captain என இண்டர்நேஷனல் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது , உலகத்தில் சிறந்த டி20 தொடரான ஐபிஎல்-லிலும் பல சாதனைகளுக்கு பேர் போனவர் விராட் கோலி.
ஆனால் “பலம் வாய்ந்த யானைக்கும் ஒரு நாள் அடி சரிக்கும்” என்பது போல் , கிங் விராட் கோலிக்கும் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அடி தொடர்ந்து விழுந்துக் கொண்டே இருக்கிறது.கிட்டதட்ட கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு போட்டியிலும் அவரால் தனது 71 வது சதத்தை நெருங்க முடியாமல் போனது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. சச்சினின் 100 சதங்களை 2, 3 ஆண்டுகளில் விராட் கோலி முறியடித்து விடுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், கோலியின் சரிவு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
எப்படியான பெளலர்களாக இருந்தாலும் சரமாரியாக அடித்து, ரன்களை குவிக்கும் திறன் கோலியிடம் இருந்தது.ஆனால் கடந்த சில வருடங்களாக எல்லா பெளலர்களிடமும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும், கோலிக்கு பெளலர்களின் மைண்டை ரீட் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் பல விமர்சனங்கள் எழுந்தது.
கடந்த வருடம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி என எதிலுமே ரன்கள் எடுக்க முடியாத நிலையில் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனது கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அதன் பிறகு தனது கேப்டன் பதவியில் இருந்து ஐ.பி.எல்-லிலும், இந்திய கிரிக்கெட் அணியிலும் விலகியது ஒட்டு மொத்தமாக ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் காரணம், 2014 இல் கோலி ஐ.பிஎல்-லில் கேப்டன் பொறுப்பேற்ற பிறகும் சரி, இந்திய அணியில் கேப்டனாக இருந்த வரையிலும் சரி கோலியால் ஒரு கப்பை கூட அடிக்க முடியாத கேப்டன் என்ற பேரை சம்பாதித்தார். என்னதான் ரெக்கார்டுகளை முறியடித்தவராக இருந்தாலும் உலகக் கோப்பையையும் சரி, ஐ.பி.எல் கோப்பையயும் சரி வெல்ல முடியாத கேப்டன் என்ற பேர் கிடைத்தது.இந்த நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது மோசமான ஆட்டத்தால் தொடரை விட்டு வெளியேறியது.
அதன் பிறகு 15 வது ஐ.பி,எல் சீசனில் கோலி மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில் மீண்டும் பெரிய அடியை சந்தித்தார். கிட்டதட்ட தொடர்ந்து 2 முறை கோல்டன் டக் ஆவுட் ஆகியிருப்பது இதுவே முதல் முறை.அதே போல் தொடர்ச்சியாக அதிக முறை டக் அவுட், 9 ரன்களில் ஆட்டமிழப்பது என்பதும் இந்த சீசனில் தான். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தொடர்ச்சியாக 50 க்கு மேல் இருந்த அவரின் சராசரி 50 க்கு கீழ் குறைந்ததும் இந்த வருடம் தான்.
கோலியின் கோல்டன் டக் அவுட்டிற்கு பிறகு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கோலியை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.கோலிக்கு பிளேயிங் 11 இல் இடம் கொடுப்பது சரியா..? அணியின் வெற்றிக்காக பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் பிளேயர்களுக்கு இடம் கொடுக்கலாமே..? என்ற விமர்சனமும் எழுந்தது.அதுமட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் கோலியின் ஃபார்ம் மிகப்பெரிய அளவில் கடந்த ஒரு மாதமாக பேசுபொருளானது. அவர் இந்தியாவிற்கும் சரி.ஐ.பி,எல்-லிலும் சரி தொடர்ச்சியாக ஒன் டவுனில் இறங்கி விளையாட கூடியவர்.இந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்த பின்பு கோலி வந்தால், பயத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழப்பதாகவும், அவரின் இடத்தை மாற்றி விளையாடினால் ஒரு வேளை வெற்றி கிடைக்குமா என்று பார்க்கலாம் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சித்தினர்.
இந்தநிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினாலும்,எதிர்பார்த்த எந்த மாற்றமும் நிகழாமல் வெறும் 9 ரன்களுக்கு மீண்டும் அவுட்டானார். அதன் பிறகு குஜராத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் களம் இறங்கிய கோலி முதல் பந்திலிருந்தே தனது பவுண்டரிகள் மூலம் பாசிட்டவான, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் கோலி கோலி என்று கூச்சலிட்டு அரங்கமே அதிர அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
அதன் பிறகு முகமது ஷமி பந்துவீச்சில் கிட்டதட்ட 14 இன்னிங்க்ஸ்களுக்கு பிறகு கோலி அரை சதம் அடித்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது பெருமூச்சு விட்ட முன்னாள் கேப்டன் கோலியின் தோளில் கை வைத்து, அவரை பாராட்டியது காண்போரை கண்கலங்க செய்தது. ஷமியின் அந்த செயல், "வெற்றியும், தோல்வியும் ஒரு வீரருக்கு பொதுவானது தான், எப்போதும் உன் பின்னால் நாங்கள் இருக்கிறோம்" என்பது போல் இருந்தது. 53 பந்துகளில் 58 ரன்கள் ( 4s- 6, 6s-1 ) எடுத்து ஷமியின் யார்க்கருக்கு தனது ஆட்டத்தை இழந்தார். ஒரு அணிக்காக 50 வது அரை சதத்தை அடித்தவர்கள் பட்டியல் முதல் இடத்தில் இருக்கிறார் கோலி.
அந்த தருணம் ஏன் அவ்வளவு உணர்ச்சிப்பூர்வமானது என்றால், கோலி ஃபார்மில் இல்லாததால், ஐ.பி.எல் முடிந்த பிறகு வரப்போக இருக்கும் உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா..? இல்லை கோலி சில இடைவேளைக்கு பிறகு வந்து விளையாடலாமா என்று பல விமர்சனங்களால் மனதளவிலும் சரி, உடல் அளவிலும் சரி மிகப்பெரிய சோர்வு நிலையில் தான் கோலி தெரிந்தார். தொடர் கோல்டன் டக் அவுட்டிற்கு பிறகு சிரிச்சுகிட்டே போன கோலியோட முகத்தை பார்த்து ரசிகர்கள் வருந்தியது குறிப்பிடத்தக்கது.