விளையாட்டு

WomensWorldCup.. இந்திய அணி அதிர்ச்சி தோல்வி: விளையாட்டு செய்திகள்!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.

WomensWorldCup.. இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:  விளையாட்டு செய்திகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டி!

2021-22 ஆண்டுக்கான சீனியர் தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் 20ம்தேதி தொடங்கி 31ம் தேதிவரை நடைபெறுகின்றன.பலவேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில், இந்திய ரயில்வேயின் விளையாட்டுக்கள் பிரிவான ரயில்வே விளையாட்டுக்கள் வாரியம் வலுவான அணியை அனுப்புகிறது.2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற

எஸ்.மீராபாய் சானு, சத்தீஷ் சிவலி்ங்கம், ரேணுபாலா, சஞ்ஜிதா சானு மற்றும் அர்ஜுனா விருது வென்ற பல பளுதூக்கும் வீரர்கள் ரயில்வே அணியில் இடம் பெற்றுள்ளனர்.இந்திய ரயில்வேயின் ஆடவர் அணி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ரயில்வே மகளிர் அணி கடந்த இரண்டு தேசிய சாம்பியன் பட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.நடப்பு போட்டிகளிலும் ரயில்வே அணிகள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WomensWorldCup.. இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:  விளையாட்டு செய்திகள்!

தோல்வியில் இருந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது,அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, கேப்டன் ஜோ ரூட்டின் 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ்சின் 91 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ்சின் அதிரடி சதம் ஆகியோரின் பங்களிப்பில் 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அந்த அணியிதொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பிராத்வெயிட் மற்றும் ஜெர்மைன் பிளாக்வுட் ஆகியோரின் சதத்தால், நல்ல நிலையை எட்டியது. அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

WomensWorldCup.. இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:  விளையாட்டு செய்திகள்!

உக்ரைன் குழந்தைகளுக்கு நிதி வழங்கிய ரோஜர் ஃபெடரர்!

சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவீஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு

5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்களைப் பார்த்து தாமும், தனது குடும்பத்தினரும் திகிலடைகிறோம், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக மனம் வருந்துகிறோம் என்று ட்விட்டரில், ஃபெடரர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு நாங்கள் உதவி வழங்குவோம், சுமார் 6 மில்லியன் உக்ரேனிய குழந்தைகள் தற்போது பள்ளி கல்வியை இழந்துள்ளனர். இதனால் கல்விக்கான அணுகலை வழங்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் ரோஜர் ஃபெடரர் குறிப்பிட்டுள்ளார்.

WomensWorldCup.. இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:  விளையாட்டு செய்திகள்!

பி.என்.பி.பரிபாஸ் ஓபன்: அரையிறுதியில் மோதும் ரஷயா - ஸ்பெயின்!

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா மற்றும் ரஷிய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோவா மோதினர்.1மணி 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் படோசா. நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் படோசா உலகின் நம்பர் 6 வீராங்கனையான மரியா சக்கரியாவுடன் மோத இருக்கிறார்.

WomensWorldCup.. இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:  விளையாட்டு செய்திகள்!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: தோல்வியடைந்த இந்திய அணி!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய- இந்திய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஸஃபாலி வெர்மா தலா 10 மற்றும் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஷிகா பாட்டியா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ரச்சேல் ஹெய்ன்ஸ் மற்றும் அலிசா ஹீலி ஆகியோர் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர்.ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது.ஆஸ்திரேலிய அணி 41 ஓவரில் 225 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 9 ஓவரில் 53 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக மாறியது.கடைசி ஓவரை இந்திய அனியின் கோஸ்வாமி வீசினார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஸ்ட்ரைக்கில் நின்றார்.இறுதியில் 49.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

banner

Related Stories

Related Stories