ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக சாஹல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து ட்வீட் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐ.பி.எல் தொடரின் 15-வது சீசன் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் கடந்த மாதம் பெங்களுருவில் நடந்தது. இந்த ஏலத்தில் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில் இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சமீபத்தில் தாங்கள் விளையாடும் ஐ.பி.எல் அணியின் பயிற்சி முகாமில் இணைந்தனர்.
இந்நிலையில் இப்போது இந்த ஆண்டு ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட யுஷ்வேந்திர சஹால் புதிய கேப்டனாக சற்று முன்னர் நியமிக்கப்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த இந்த அறிவிப்பு வெளியானதும் பழைய கேப்டனான சஞ்சு சாம்சன் சாஹலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த மாற்றம் உண்மை என நம்பிவிட்டனர்.
சாஹல், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பாஸ்வேர்டை தந்தமைக்கு நன்றி எனவும் சாஹல் பதிவிட்டுள்ளார். மேலும், தான் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லர் உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாகவும் சாஹல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த ட்வீட்கள் ராஜஸ்தான் அணியின் ப்ரொமோஷன் திட்டம் என தெரியவந்ததை அடுத்து ரசிகர்கள் இந்த பதிவுகளை சமூகவலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.