விளையாட்டு

IPL ஏலத்தில் ’மெகா குளறுபடி’ ; வீடியோ பகிர்ந்து சாரு சர்மாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள் - நடந்தது என்ன?

டெல்லி அணியின் குமார் கிராந்தியிடம் ஏலம் உயர்த்தப் போகிறீர்களா என சாரு சர்மா கேட்டபோது அதற்கு கிராந்தி முதலில் கையை உயர்த்திவிட்டு பின்னர் இறக்கியிருந்தார்.

IPL ஏலத்தில் ’மெகா குளறுபடி’ ; வீடியோ பகிர்ந்து சாரு சர்மாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. சுமார் 200 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதல் நாள் மெகா ஏலத்தின் போது ஏலத்தாரர் ஹூக் எட்மீட்ஸ் மயங்கியதன் காரணமாக அவர் இடத்திற்கு பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான சாரு சர்மா அழைத்து வரப்பட்டார்.

அதன் பிறகு மும்முரமாக ஏலம் கடும் போட்டியுடனேயே நடைபெற்றது. இருப்பினும் ஏலத்தாரர் செய்த தவறால் மும்பை அணிக்குச் சென்றிருக்க வேண்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதி டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

அடிப்படை விலையான 50 லட்சத்தில் இருந்து கலீல் அகமதுக்கான ஏலம் தொடங்கி 5 கோடி வரை நீண்டது. அதன் பின்னர் மும்பை அணி 5.25 கோடிக்கு ஏலம் கேட்டது.

டெல்லி அணியின் குமார் கிராந்தியிடம் ஏலம் உயர்த்தப் போகிறீர்களா என சாரு சர்மா கேட்டபோது அதற்கு கிராந்தி முதலில் கையை உயர்த்திவிட்டு பின்னர் இறக்கியிருந்தார். இதன் அடிப்படையில் கலீல் அகமது மும்பை அணிக்கே விற்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மும்பையை நோக்கி ஏலத் தொகையை உயர்த்துகிறீர்களா எனக் கேட்ட போது அவர்கள் ஏதும் பதில் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்கள். இதனையடுத்து டெல்லி அணிதான் ஏலம் கேட்டதாக நினைத்துக் கொண்ட சாரு சர்மா கலீல் அகமது 5.25 கோடிக்கு டெல்லி அணிக்கு ஏலம் போனதாக அறிவித்திருக்கிறார்.

இந்த குளறுபடி தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கலீல் அகமதுவை மும்பையிடம் திருப்பி ஒப்படைக்கும் படி பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories