ஆஸ்திரேலிய ஓபன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் இத்தாலியின் மத்தேயு பெரிட்டினியும் மோதியிருந்தனர். இந்த போட்டியை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று ரஃபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபனில் நடால் 6வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
டென்னிஸ் உலகை ஆண்டு வரும் நடால், ஃபெடரர், ஜோக்கோவிச் இந்த மூவருமே சமமாக ஆளுக்கு 20 க்ராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்றிருக்கின்றனர். இன்னும் ஒரு க்ராண்ட்ஸ்லாமை வெல்பவர் இந்த ரேஸில் முன்னுக்கு வந்து டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக க்ராண்ட்ஸால்களை வென்ற வீரராக போற்றப்படுவார். இதனால் வழக்கத்தை விட க்ராண்ட்ஸ்லாம் தொடர்களின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
இந்நிலையில்தான் முக்கியமான இந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடர் தொடங்கியது. காயம் காரணமாக ஃபெடரர் இந்த தொடரில் ஆடவில்லை. தடுப்பூசி சர்ச்சையில் சிக்கி கடைசி நிமிடத்தில் ஜோக்கோவிச்சும் இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. மீதமிருந்தது நடால் மட்டுமே. ஜாம்பவான் வீரர்களில் நடால் மட்டுமே இந்த தொடரில் ஆடுவதால் எளிதில் இந்த தொடரை வென்று 21 வது க்ராண்ட்ஸ்லாமையும் தட்டி தூக்கி வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இப்போது அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டியில் நடால் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
நடால் மற்றும் மத்தேயும் பெரிட்டினி இருவருமே இதற்கு முன் 2019 அமெரிக்க ஓபனின் அரையிறுதியில் மோதியிருந்தனர். அதில் சிரமமேயின்றி நேர் செட் கணக்கில் நடால் பெரிட்டினியை வென்றிருந்தார். ஆனால், அதன்பிறகு பெரிட்டினி தன்னை மெருகேற்றிக் கொண்டு சிறப்பாக ஆடினார். கடந்த ஆண்டிம் விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் இத்தாலியின் மத்தேயு பெரிட்டினியும் மோதியிருந்தனர். இந்த போட்டியை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று ரஃபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபனில் நடால் 6வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
டென்னிஸ் உலகை ஆண்டு வரும் நடால், ஃபெடரர், ஜோக்கோவிச் இந்த மூவருமே சமமாக ஆளுக்கு 20 க்ராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்றிருக்கின்றனர். இன்னும் ஒரு க்ராண்ட்ஸ்லாமை வெல்பவர் இந்த ரேஸில் முன்னுக்கு வந்து டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக க்ராண்ட்ஸால்களை வென்ற வீரராக போற்றப்படுவார். இதனால் வழக்கத்தை விட க்ராண்ட்ஸ்லாம் தொடர்களின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
இந்நிலையில்தான் முக்கியமான இந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடர் தொடங்கியது. காயம் காரணமாக ஃபெடரர் இந்த தொடரில் ஆடவில்லை. தடுப்பூசி சர்ச்சையில் சிக்கி கடைசி நிமிடத்தில் ஜோக்கோவிச்சும் இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. மீதமிருந்தது நடால் மட்டுமே. ஜாம்பவான் வீரர்களில் நடால் மட்டுமே இந்த தொடரில் ஆடுவதால் எளிதில் இந்த தொடரை வென்று 21 வது க்ராண்ட்ஸ்லாமையும் தட்டி தூக்கி வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இப்போது அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டியில் நடால் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
நடால் மற்றும் மத்தேயும் பெரிட்டினி இருவருமே இதற்கு முன் 2019 அமெரிக்க ஓபனின் அரையிறுதியில் மோதியிருந்தனர். அதில் சிரமமேயின்றி நேர் செட் கணக்கில் நடால் பெரிட்டினியை வென்றிருந்தார். ஆனால், அதன்பிறகு பெரிட்டினி தன்னை மெருகேற்றிக் கொண்டு சிறப்பாக ஆடினார். கடந்த ஆண்டிம் விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தார். இதனால் பெரிட்டினி நடாலுக்கு ஓரளவிற்கு போட்டியளிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
முதல் இரண்டு செட்களுமே நடாலின் ஆதிக்கம்தான். 6-3, 6-2 என இரண்டு செட்களையுமே வென்று மூன்றாவது செட்டிலேயே மேட்ச்சை முடித்துவிடுவாரோ என எண்ண வைத்தார். ஆனால், ஆட்டத்தை கொஞ்சம் பரபரப்பாக்கி தோற்பதை போல விழுந்து பாசாங்கு காட்டி ஜெயிப்பதுதானே நடாலின் ஸ்டைல். அதேதான் இங்கே நடந்திருந்தது. மூன்றாவது செட்டில் பெரிட்டின் திருப்பி அடிக்க ஆரம்பித்தார். 6-3 என இந்த செட்டை வென்று அசத்தியிருந்தார். டென்னிஸில் நடாலுக்கு எதிராக பெரிட்டினி வென்ற முதல் செட் இதுதான். இதன்பிறகு, நடந்த நான்காவது செட்தான் பயங்கர பரபரப்பாக அமைந்திருந்தது. மூன்றாவது செட்டை தோற்றுவிட்டு நான்காவது செட்டின் முதல் கேமையே நடால் வென்றிருந்தார். அடுத்து இரண்டாவது கேமை பெரிட்டின் வென்றார். 1-1 என சமநிலைக்கு வந்தனர். அடுத்து நடால் ஒரு கேம் பெரிட்டினி ஒரு கேம் என மாறி மாறி வெல்ல 2-2, 3-3 என இருவரும் சமநிலையிலேயே ஆடிக்கொண்டிருந்தனர். 3-3 என்ற நிலைக்கு பிறகான அடுத்த 3 கேம்களையுமே நடால் வென்று அசத்தினார். 6-3 என இந்த பரபரப்பான நான்காவது செட்டையும் வென்றார். போட்டியையும் வென்றார். 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் நடாலின் 6வது இறுதிப்போட்டியாக இது அமையப்போகிறது. இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே நடால் ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருக்கிறார். இறுதிப்போட்டியில் மெத்வதேவ் அல்லது சிட்சிபாஸை நடால் எதிர்கொள்ளக்கூடும்.