விளையாட்டு

5 ஆண்டுகளுக்கு பின் வான்கடேவில் களமிறங்கும் இந்திய அணி.. வரலாற்று சாதனையை மீண்டும் பதிவு செய்யுமா?

5 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை வான்கடே மைதானத்தில் மீண்டும் டெஸ்ட் போட்டி அரங்கேற உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் வான்கடேவில் களமிறங்கும் இந்திய அணி.. வரலாற்று சாதனையை மீண்டும் பதிவு செய்யுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

5 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை வான்கடே மைதானத்தில் மீண்டும் டெஸ்ட் போட்டி - மும்பையில் நாளை இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான மும்பை வான்கடே மைதானத்தில் வரலாற்று நிகழ்வுகள் வாய்ந்த சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற 2011 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்ற வரலாற்று வெற்றி இன்னும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேற உள்ளது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு நாளை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1975 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்த மைதானத்தில் 1976 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

5 ஆண்டுகளுக்கு பின் வான்கடேவில் களமிறங்கும் இந்திய அணி.. வரலாற்று சாதனையை மீண்டும் பதிவு செய்யுமா?

இந்த மைதானத்தில் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறியுள்ளது. இதில் இந்திய அணி 11 போட்டிகளில் வெற்றியை கண்டுள்ளது. 7 போட்டிகள் தோல்வியிலும், 7 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது.

கடைசியாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

ஆகையால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி, மீதான வெற்றி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக நடப்பு தொடரில் கான்பூரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், covid-19 விதிமுறைகளை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் கடுமையாக பின்பற்றப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories