விளையாட்டு

31 நிமிடம்தான்; ஆட்டத்தை முடித்த இந்திய சாம்பியன்.. வேர்ல்டு டூர் ஃபைனல்ஸில் பதக்கத்தை வெல்வாரா சிந்து?

"வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் - 2018 சாம்பியனான இந்தியாவின் சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்"

31 நிமிடம்தான்; ஆட்டத்தை முடித்த  இந்திய சாம்பியன்.. வேர்ல்டு டூர் ஃபைனல்ஸில் பதக்கத்தை வெல்வாரா சிந்து?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன்" தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னாள் சாம்பியனான (2018) இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி.

ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் நடப்பாண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் இந்தோனேஷிய ஓபன், இந்தோனேஷிய மாஸ்டர் அல்லது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இன்று தனது 2-வது லீக் ஆட்டத்தில், ஜெர்மனி வீராங்கனை yvonne Li உடன் விளையாடினார்.

31 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிந்து 21-10, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள சிந்து தனது இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும், 2018 வேர்ல்டு டூர் பைனல்ஸ் சாம்பியனுமான சிந்து மீதான பதக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories