விளையாட்டு

''துபாயில் இருந்து 5 கோடி ரூபாய்க்கு 2 வாட்ச் வாங்கி வந்தேனா?'' :அலறும் ஹர்திக் பாண்டியா! -நடந்தது என்ன?

மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

''துபாயில் இருந்து 5 கோடி ரூபாய்க்கு 2 வாட்ச்  வாங்கி வந்தேனா?'' :அலறும் ஹர்திக் பாண்டியா! -நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துபாயில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து இந்திய வீரர்கள் நாடு திருப்பினர்.

இதையடுத்து நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்த இந்திய அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ. 5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

மேலும் கைக்கடிகாரத்திற்காக உரிய ஆவணங்கள் எதுவும் ஹர்திக் பாண்டியாவிடம் இல்லாததால் அதைப் பறிமுதல் செய்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ஹர்திக் பாண்டியா விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரேயொரு கைக்கடிகாரம் மட்டுமே இருந்தது.

மும்பை விமான நிலையத்தில் நானே முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் கைக்கடிகாரம் குறித்த தகவலைத் தெரிவித்தேன். ஆனால் கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடிகாரத்திற்காக ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். இதற்கான வரி எவ்வளவு என்று அதிகாரிகள் சொன்னவுடன் அதை செலுத்தப்போகிறேன். மேலும் கடிகாரத்தின் விலை ரூ.5கோடி என்பது தவறானது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories