விளையாட்டு

“சாதி ரீதியாக அவதூறு பேச்சு” நள்ளிரவில் கைதான யுவராஜ் சிங் - 3 மணி நேரம் விசாரணை : என்ன நடந்தது?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

“சாதி ரீதியாக அவதூறு பேச்சு” நள்ளிரவில் கைதான யுவராஜ் சிங் - 3 மணி நேரம் விசாரணை : என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் நேரலை வீடியோவில், இந்திய அணியின் பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹலுடன் பேசினார்.

அப்போது பட்டியலின மக்களை இழிவுபடுத்தியும், சாதிய ரீதியாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதைப் பார்த்து அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவர் ஹரியானா காவல் துறையிடம் யுவராஜ் சிங் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போலிஸார் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று யுவராஜ் சிங்க போலிஸாரிடம் சரணடைந்துள்ளார். பிறகு மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து சில மணி நேரத்திலேயே யுவராஜ் சிங்கை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது என மூத்த போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சாதிய ரீதியான சர்ச்சை கருத்து தொடர்பாக யுவராஜ் சிங், தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories