சமீபத்தில் நடந்து முடிந்த கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் போட்டியிட்டார். இவர் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகி கார்த்திக்கிற்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களே இவருக்கு வாக்களிக்காமல் படுதோல்வியைப் பரிசாக அளித்திருக்கிறார்கள்.
பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர் வெறும் 1 ஓட்டு பெற்று படுதோல்வியடைந்த நிலையில், #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_Vote_BJP ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.
இந்நிலையில், இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் 2021 இறுதிப்போட்டியின்போதும் பா.ஜ.கவின் மானம் கப்பலேறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இறுதிப் போட்டியின்போது மைதானத்தில் அமர்ந்து போட்டியைப் பார்த்த ரசிகர் ஒருவர் ‘ஒத்த ஓட்டு பா.ஜ.க’ என எழுதிய பதாகையை வைத்திருந்தார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பா.ஜ.கவின் தோல்வி புகழ் துபாய் வரை பரவியிருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.