விளையாட்டு

பனிப்போரால் மூண்ட போட்டி ஒலிம்பிக்; ரியோ ஒலிம்பிக் ஒரு ரீவைன்ட் ! - Olympic Updates

பனிப்போரால் மூண்ட போட்டி ஒலிம்பிக்; ரியோ ஒலிம்பிக் ஒரு ரீவைன்ட் ! - Olympic Updates
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரியோ ஒலிம்பிக் ரீவைண்ட்

கடந்த 2016 ஆகஸ்டில் ஜெனிரோவில் ரியோ ஒலிம்பிக்-2016 நடந்துது. 207 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், 31 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றிருந்தார்கள். இந்த ரியோ போட்டிகளில் மொத்தம் 306 வகை பதக்கங்கள் வழங்கப்பட்டது. அந்த ஒலிம்பிக்கில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை காணலாம்.

43 தங்கப் பதக்கங்கள வாங்கி தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாக பதக்கப் பட்டியலில் முதலிடம் வந்துது அமெரிக்கா. இது வரைக்கும் 17 முறை பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது அமெரிக்கா. ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், மூன்று நாடுகள் தங்களோட முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வாங்கியுள்ளது. ஃபிஜி, ஜோர்டான், கொசோவோ ஆகிய நாடுகள் முதல் முறையாக தங்கள் நாட்டுக்கான பதக்கத்தை வென்றார்கள்.

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், தன்னோட 5-வது ஒலிம்பிக் போட்டியான ரியோ ஒலிம்பிக்கில் 28 பதக்கங்களை ஜெயித்து சாதனை படைத்தார். தன்னோட முதல் ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய 19 வயதான சிமோன் பைல்ஸ், நாலு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசாத்திய சாதனை படைத்திருந்தார். இந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வுபெற்ற உசைன் போல்ட், அனைத்து கால கட்டத்துலயும் மிகச் சிறந்த தடகள வீரர் என்ற தன்னோட சிறப்பை உறுதி செய்யும் விதமாக, 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

கடந்த 9 ஒலிம்பிக் போட்டிகளுக்கும் மேல் வில்வித்தை பிரிவில் வழங்கப்பட்ட 36 தங்கப் பதக்கங்களில் தென் கொரியா 23 பதக்கங்களை வென்றது. இதன் மூலமாக வில்வித்தை விளையாட்டு பிரிவில் 76.67% அளவுக்கு தென் கொரியா தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. ரியோ ஒலிம்பிக்கிலும் மொத்தமாக வில்வித்தையில் இருக்கும் 4 தங்கத்தையும் தென் கொரியாதான் வாங்கியது. வில்வித்தை, தடகளம், நவீன பென்டத்தலான், துப்பாக்கி சுடுதல், நீச்சல் விளையாட்டு, டிராக் சைக்கிள் போட்டி, பளுதூக்குதல் இந்த ஏழு ஒலிம்பிக் விளையாட்டுகளில் 27 புது உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.

போட்டி ஒலிம்பிக்

1896-ல் தொடங்கிய நவீன ஒலிம்பிக் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர எல்லாக் காலங்களிலும் நடந்துள்ளது. 1916-ல் முதல் உலகப் போர், 1940, 1944-ல் இரண்டாம் உலகப் போர் இந்த நேரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. இதேமாதிரி 1984-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது ஒரு முக்கியமான நிகழ்வு நடந்துது. 1970, 80களில் சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையில் பனிப்போர் நிலவிய காலம். அந்தச் சூழலில் 1980-ல் மாஸ்கோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. ஆனால் இந்தப் போட்டியை அமெரிக்கா புறக்கணித்தது.

அதற்கு பதிலடி தர சோவியத் யூனியன் காத்திருந்தது. 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்த சோவியத் யூனியன் பழி தீர்த்தது. சோவியத் யூனியன் தலைமையிலான சில நாடுகளும், அதன் நட்பு நாடுகளும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை புறக்கணித்தது. ஒலிம்பிக்குக்குப் போட்டியா ‘பிரெண்ட்ஷிப் கேம்ஸ்' அதாவது நல்லுறவு விளையாட்டு எனும் பெயரில் சோவியத் யூனியன் நடத்தியது. லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த அதே காலகட்டத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது. சோவியத் யூனியன் மட்டுல்லாமல் அதன் ஆதரவு மற்றும் நட்பு நாடுகளும் பங்கேற்றது.

லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற சில நாடுகளும் இந்த நல்லுறவு விளையாட்டில் பங்கேற்றது. அதன்படி இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் இட்கில் பங்கேற்றது. மொத்தமாக 50 நாடுகள் கலந்துக்கொண்ட இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் சோவியத் யூனியன் 126 தங்கம், 87 வெள்ளி, 69 வெண்கலம் என 282 பதக்கங்களை வாங்கி பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தனர். வல்லரசு நாடுகளுக்கு இடையில் நிலவிய இந்தப் போட்டி குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகவும் ஒலிம்பிக் வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் பாரம்பரியம் கிரேக்கத்தில் நடந்த பழங்கால ஒலிம்பிக்கில் இருந்து பெறப்பட்டது.

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாட்டை நடத்துவதற்கான கால இடைவெளி ‘ஒலிம்பியாட்’ என்று அழைக்கப்படுது. ஒலிம்பியாட் சுழற்சி வருஷத்தோட ஜனவரி மாதம் முதல் நாளில் தொடங்கி நான்காவது ஆண்டோட டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. கொரோனா காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 5வது ஆண்டில் தற்போது நடைபெறுகிறது. 2024 கோடைகால விளையாட்டுகள் பாரிஸிலும், 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories