விளையாட்டு

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.. தடுமாறும் இந்தியா.. மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFINALS

இந்திய அணி 146-3 என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்திருந்தது. இரண்டாம் நாளில் இருதரப்புமே சம அளவில்தான் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து..  தடுமாறும் இந்தியா..  மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFINALS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

வருணபகவானின் புண்ணியத்தால் மழையின் குறுக்கீடு பெரிதாக இல்லை. அதனால் இரண்டாம் நாளை விட அதிக ஓவர்கள் வீசப்பட்டது.

இரண்டாம் நாளின் தொடர்ச்சியாக ரஹானேவும் கோலியும் க்ரீஷுக்கு வந்தனர். ஜேமிசனும் போல்ட்டும் முதல் ஸ்பெல்லை வீசினர். இரண்டாம் நாளில் தட்டுத்தடுமாறியிருந்த ரஹானே நேற்று கொஞ்சம் நல்ல டச்சில் இருந்தார். போல்ட்டை அவர் டிஃபன்ஸ் செய்த விதத்தை கமெண்ட்ரி பாக்ஸில் தினேஷ் கார்த்திக்கும் நாஸீர் ஹுசைனும் சிலாகித்து கொண்டிருந்தனர். கோலியும் இன்னொரு எண்ட்டில் நல்ல கண்ட்ரோலான முறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார். ஜேமிசன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 5-6 ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசி கோலியை செட் செய்து திடீரென ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி ஏமாற்றி lbw ஆக்கினார். இரண்டு நாட்களாக ஜேமிசன் வெறும் 7 பந்துகளை மட்டுமே ஸ்டம்ப்பை அட்டாக் செய்யுமாறு வீசியிருந்தார். கோலிக்கு ஒரே ஒரு டெலிவரிதான் வீசினார். அதிலேயே கோலி காலி.

தொடர்ந்து குட்லெந்திலேயே வீசும் ஜேமிசன் இரண்டாம் நாளை விட நேற்று லெந்த்தில் சிறிய மாற்றம் செய்திருந்தார். இரண்டாம் நாளில் குட் லெந்த் பகுதியிலேயே கொஞ்சம் பின்னால் தள்ளி பந்துகளை பிட்ச் செய்திருந்தார். இதனால் பந்துகள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸோடு ஸ்டம்புக்கு மேலேயே சென்று கொண்டிருந்தது. நேற்று அதை கொஞ்சம் மாற்றினார். ஒரு 85 செ.மீ அளவுக்கு லெந்த்தை குறைத்து வீச அது ஸ்டம்பை சரியாக அட்டாக் செய்யும் உயரத்தில் வந்தது. இந்த மாதிரியான லெந்த் குறைப்பு பந்து ஒன்றில்தான் கோலி அவுட் ஆனார்.

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து..  தடுமாறும் இந்தியா..  மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFINALS

நியுசிலாந்துக்கு தேவைப்படும் நேரங்களிலெல்லாம் விக்கெட் எடுத்து கொடுக்கும் பௌலராக ஜேமிசன் இருந்தார். இரண்டாம் நாளில் ரோஹித்-கில் பார்ட்னர்ஷிப்பை அவர்தான் உடைத்தார். கேப்டன் கோலியையும் சரியான நேரத்தில் அவர்தான் வீழ்த்தினார். ஜேமிசன் பற்றி பேசிவிட்டதால் ரஹானேவை விட்டுவிட்டு கொஞ்சம் நான் லீனியராக பண்ட் பற்றி பார்த்துவிடுவோம்.

கோலி அவுட் ஆனவுடன் பண்ட் உள்ளே வந்தார். அவர் ஒரு அடிதடி ஆட்டக்காரர். க்ரீஸுக்குள் வந்த உடனேயே அட்டாக் செய்ய வேண்டும் என நினைப்பார். ஆனால், பண்ட்டை க்ரீஸுக்குள் வைத்து மிரட்டி விட்டனர் நியுசிலாந்து பௌலர்கள். ஜேமிசன், போல்ட், வேக்னர் என மூவரும் சேர்ந்து தொடர்ந்து 5 ஓவர்களை மெய்டனாக்கினர். பண்ட் 19 பந்துகளை சந்தித்தும் ரன் எடுக்க முடியவில்லை. பயரங்கர ப்ரஷர் உருவாகியிருந்தது. இந்நிலையில், ஜேமிசன் கையில் மீண்டும் பந்து செல்கிறது. ஓவர் தி விக்கெட்டில் வந்து இடக்கை பேட்ஸ்மேனுக்கு வெளியே செல்லும் ஆங்கிளில் வீசுகிறார். இதில் தட்டுத்தடுமாறி அரைகுறையாக மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்தார். 20 வது பந்தில் வெற்றிகரமாக ரன்கணக்கை தொடங்கினார் பண்ட். ஆனால், அதே ஓவரில் அவுட்டும் ஆனார். ஜேமிசன் நன்கு வெளியே வீசிய இன்னொரு பந்தையும் பேட்டை விட்டு ஷாட் ஆட முயன்று ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.

பண்ட்டையும் ஜேமிசன் செட் செய்துதான் வீழ்த்தினார். அந்த 5 ஓவர்கள் மெய்டனில் 3 ஓவர்களை வீசியிருந்த ஜேமிசன் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பண்ட்டுக்கு டைட்டாக இன்கம்மிங் டெலிவரிக்களை வீசியிருப்பார். இப்படி வீசி ரன் எடுப்பதையும் ஷாட் ஆடுவதையும் தடுத்து ஒரு ப்ரஷரை உருவாக்கினார். ப்ரஷர் உருவானவுடன் ஓவர் தி விக்கெட்டுக்கு போய் ஷாட் ஆட ரூம் கொடுத்து பண்ட்டுக்கு வலை வீசினார். வலையில் பண்ட் சரியாக மாட்டிக் கொண்டார்.

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து..  தடுமாறும் இந்தியா..  மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFINALS

முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனவுடன் ரஹானே பக்கம் கவனம் திரும்பியது. இந்தியா ஒரு கௌரவமான ஸ்கோரை எடுக்க அவரையே பெரிதாக நம்பியிருந்தது. அவரும் கொஞ்சம் நன்றாகவே ஆடினார். ஆனால், நியுசிலாந்து விரித்த வலையில் தானாக சென்று மாட்டிக்கொண்டார். ரஹானே அவுட் ஆவதற்கு முந்தைய பந்தும் ஒரு ஷாட் பால்தான். அதை அரைகுறையாக அடித்து ஃபீல்டர் இல்லாததால் தப்பித்திருந்தார். அடுத்த பந்தே ஆஃப் சைடிலிருந்த லேதமை லெக் அம்பயர் சைடுக்கு மாற்றினார் வில்லியம்சன். மிட் விக்கெட்டும் டீப் லெக்கும் கூட இருந்தது. இது ஒரு ஷார்ட் பால் கேட்ச்சுக்கான பொறி. இதை ரஹானேவும் கவனித்தார். ஆனால், அடுத்து வீசிய ஷார்ட் பாலை நேராக லேதமின் கையில் தூக்கி கொடுத்து கேட்ச் ஆனார். இது மிகப்பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. எதிரணியின் வெளிப்படையான மூவை கூட ரஹானே போன்ற வீரரால் சரியாக கணிக்க முடியவில்லையா?!

இதன்பிறகு, அஷ்வின் சில பவுண்டரிக்களை அடித்து பயனுள்ள ரன்களை சேர்த்துக் கொடுத்தார். ஜடேஜாவும் கொஞ்ச நேரம் க்ரீஸுக்குள் நின்றார். ஆனாலும், பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. இந்தியா 217 க்கு ஆல் அவுட். ஜடேஜா கொஞ்சம் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடியிருந்தால் 250 ஐ தொட்டிருக்கலாம்.

நியுசிலாந்து சார்பில் கான்வேயும் லேதமும் முதல் இன்னிங்ஸை தொடங்கினர். பும்ராவும் இஷாந்த் சர்மாவும் முதல் ஸ்பெல்லை வீசினர். இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் இடையே இருந்த ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவுக்கு ஒரு இலக்கு இல்லை. இந்த மோசமான ஓவர்காஸ்ட் கண்டிஷனில் எதைநோக்கி செல்ல வேண்டும் என்பது தெரியாததாக் ஒரு முழுமையான கேம்ப்ளான் இல்லாமலே ஆடியது. நியுசிலாந்துக்கு ஒரு இலக்கு கிடைத்துவிட்டது. அதை நோக்கி செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் மிக தெளிவாக கேம்ப்ளானை வகுத்துக் கொண்டனர். '217 என்கிற குறைவான ஸ்கோரையே இந்தியா எடுத்துள்ளது. நாம் அவசரப்படாமல் நின்று ஆடினால் நிச்சயம் இந்த ஸ்கோரை கடந்து ஒரு பெரிய லீட் எடுத்துவிட முடியும்' இந்த எண்ணம்தான் நியுசிலாந்தின் கேம்ப்ளான். அதனால் ரொம்பவே பொறுமையாக அவசரமே இல்லாமல் நின்று ஆடினர்.

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து..  தடுமாறும் இந்தியா..  மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFINALS

நியுசிலாந்து பௌலர்களுக்கு ஆகும் அளவுக்கு இந்திய பௌலர்களுக்கு ஸ்விங் ஆகவில்லை என்கிற குற்றச்சாட்டை அதிகம் பார்க்க முடிந்தது. ஆம், உண்மைதான். நியுசிலாந்து வீரர்கள் செய்ததில் பாதி அளவுக்குக் கூட இந்திய வீரர்கள் ஸ்விங் செய்யவில்லை. ஆனால், இங்கே வேறு சில விஷயங்களையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் 2 வீரர்களை தவிர எல்லாரும் வலக்கை பேட்ஸ்மேன்கள். ஆனால், நியுசிலாந்தில் ஓப்பனிங்கிலேயே இருவரும் இடக்கை பேட்ஸ்மேன்கள். ஒரு வலக்கை பேட்ஸ்மேனுக்கு ஸ்விங் செய்வதை போலவே இடக்கை பேட்ஸ்மேனுக்கும் ஸ்விங் செய்ய முடியாது. மேலும், இந்தியாவில் மூன்று பௌலர்களும் வலக்கை வேகப்பந்து வீச்சாளர்கள். அதில் இருவர்தான் பெரிதாக ஸ்விங் செய்வார்கள். அதில் ஒருவர்தான் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்வார். இதனால் நிச்சயம் இடக்கை பேட்ஸ்மேனுக்கு நாம் நினைக்கும் அளவுக்கு ஸ்விங் செய்ய முடியாது. மேலும், இந்தியாவின் திட்டமும் இன்கம்மிங் டெலிவரிக்களை டைட்டாக வீச வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஃபைன் லெக், ஸ்கொயர் லெக், ஷார்ட் ஸ்கொயர் லெக், ஷார்ட் லெக் போன்ற ஃபீல்ட் செட்டப்களிலிருந்து இதை உணர முடியும். மேலும், கான்வேயின் ஸ்கோரிங் ஏரியாக்களை பார்த்தாலும் இது புரியும் மிட் ஆன்/ ஆப் ல் அவர் ஒரு ரன்னை கூட அடிக்கவில்லை. காரணம், மேலே வந்து மோதும் வகையில் வரும் இன்கம்மிங் டெலிவரிக்களை ஸ்ட்ரைட்டாக ஷாட் அடிப்பது கடினம். ரவுண்ட் தி விக்கெட்டில் இன்கம்மிங் டெலிவரியாக வீசி எட்ஜ் எடுக்க வேண்டும் அல்லது செட் செய்துவிட்டு ஓவர் தி விக்கெட்டில் வந்து ரூம் கொடுத்து விக்கெட் எடுக்க வேண்டும். இதுதான் இந்தியாவின் ப்ளான். இது ஓரளவுக்கு ஒர்க் அவுட்டும் ஆனது. ஷமி முரட்டுத்தனமாக இன்கம்மிங் டெலிவரிக்களை வீசி பேட்ஸ்மேன் மீது பந்தை மோத செய்தார். இதற்கு சில கடினமான ஸ்லிப் கேட்ச் வாய்ப்புகளும் உருவானது. ஆனால், எதுவும் விக்கெட்டாக மாறவில்லை.

அஷ்வின் வந்துதான் இந்தியாவுக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அஷ்வினின் பந்துக்குத்தான் அவர்களும் ஓரளவுக்கு திணறினர். நல்ல குட் லெந்தில் போட்டு விட்டு அஷ்வின் தூக்கி போட்டு ஷாட்டுக்கு ஆசைகாட்டிய ஒரு பந்தை விராட் கோலியின் கையில் கேட்ச் ஆக்கி வெளியேறினார் லேதம். இதன்பிறகு, கான்வே அரைசதத்தை கடந்தார். கடைசியில் ஒருவழியாக இந்தியாவின் இன்கம்கிங் டெலிவரி ப்ளானுக்கு இஷாந்த் சர்மாவிடம் இரையானார் கான்வே. மூன்றாம் நாள் முடிவில் நியுசிலாந்து அணி 101-2 என்ற நிலையில் உள்ளது. போட்டி இப்போது கொஞ்சம் நியுசிலாந்து பக்கமாக சரிந்துள்ளது என்பதே நிதர்சனம். நான்காம் நாளில் இந்தியா சீக்கிரமே நியுசிலாந்தின் விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டும்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories