விளையாட்டு

அனுபவம் Vs இளமை கோலியை குழப்பப் போகும் நம்பர் 11: இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? #WTCFinal

கோலி அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுப்பாரா? ரிஸ்க் எடுப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அனுபவம் Vs இளமை கோலியை குழப்பப் போகும் நம்பர் 11: இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? #WTCFinal
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒரு கோலாகலமான திருவிழாவை எதிர்கொள்ளவிருக்கிறது கிரிக்கெட் உலகம். கிரிக்கெட்டின் ஆன்மா என வர்ணிக்கப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வருகிற 18 ம் தேதி தொடங்குகிறது. கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல மல்லுக்கட்ட போகின்றன.

இந்நிலையில், இந்த முக்கியமான போட்டியில் ஆடப்போகிற 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இந்திய அணி வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஷ்வின், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, சிராஜ், விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி. இந்த 15 பேர் கொண்ட பட்டியலிலிருந்து தனக்கான ப்ளேயிங் லெவனை கோலி தேர்ந்தெடுக்கப் போகிறார்.

எந்த 11 வீரர்களை கோலி தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதை நாமே ஏறக்குறைய கணித்துவிட முடியும். ஓப்பனிங் ஸ்லாட்டுக்கு கோலிக்கு ரோஹித், கில், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என நான்கு வாய்ப்புகள் இருந்தது. கே.எல்.ராகுல் பல மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் இறங்கவில்லை. மயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய தொடரில் கடுமையாக சொதப்பியிருந்தார்.

அனுபவம் Vs இளமை கோலியை குழப்பப் போகும் நம்பர் 11: இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? #WTCFinal

இதனால் இவர்கள் இருவரையுமே 15 பேர் கொண்ட அணியில் கோலி தேர்வு செய்யவில்லை. மீதமிருக்கும் வாய்ப்பு ரோஹித் மற்றும் கில் மட்டும்தான். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்த கூட்டணி நன்றாக ஆடியிருப்பதால், இவர்கள் இருவருமே இறுதிப்போட்டியிலும் ஓப்பனர்களாக இறங்க போகின்றனர். மிடில் ஆர்டர் குழப்பமின்றி தெளிவாக இருக்கிறது.

நம்பர் 3, 4, 5 இல் புஜாரா, கோலி, ரஹானே மூவரும் இறங்கிவிடுவார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ரஹானே கொஞ்சம் மோசமான ஃபார்மில் இருந்தாலும், இது ஒரு முக்கியமான போட்டி என்பதால் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லார்ட்ஸிலும் மெல்பர்னிலும் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை இங்கேயும் ரஹானே ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விக்கெட் கீப்பர் ஸ்லாட்டிற்கு ரிஷப் பண்ட், விருத்திமான் சஹா என இரண்டு வாய்ப்புகள் இருந்தாலும் கோலி நூறு சதவீதம் ரிஷப் பண்டைதான் தேர்வு செய்ய போகிறார். ஆஸ்திரேலியாவில் ஆடியதை போன்ற அசாத்தியமான இன்னிங்ஸை பண்ட்டிடம் மீண்டும் ஒரு முறை கோலி எதிர்பார்ப்பார். விருத்திமான் சஹா ஒரு பேக்-அப் வாய்ப்பாக மட்டுமே பார்க்கப்படுகிறார்.

அனுபவம் Vs இளமை கோலியை குழப்பப் போகும் நம்பர் 11: இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? #WTCFinal

நம்பர் 7 இல் இறக்க ஜடேஜா, ஹனுமா விஹாரி என இரண்டு வாய்ப்புகள் கோலிக்கு இருக்கிறது. ஜடேஜா பயங்கரமான ஃபார்மில் இருப்பதால் அவரை தேர்வு செய்வதுதான் சிறப்பாக இருக்கும். கோலியும் அதையே செய்வார் என நம்பப்படுகிறது. பிட்ச் கொஞ்சம் ஃப்ளாட்டாக வறண்டு இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படியான சமயங்களில் அஷ்வின் துருப்புச்சீட்டாக இருப்பார். அதனால் ப்ளேயிங் லெவனில் அவருக்கும் ஒரு இடம் கட்டாயம் உண்டு.

11 பேருக்கு 8 பேருக்கான இடம் நிரம்பிவிட்டது. இன்னும் 3 இடங்கள் மீதமிருக்கிறது. அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கானது. 3 இடங்களுக்கு இங்கே 5 வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டி போடுகிறார். பும்ரா, ஷமி, சுராஜ், இஷாந்த், உமேஷ் யாதவ் என 5 வாய்ப்புகள் கோலிக்கு இருக்கிறது. பும்ராவும் ஷமியும் உறுதியாக இடம்பெறுவார்கள். உமேஷ் யாதவ் சரியான ஃபார்மில் இல்லாததால் அவருக்கான வாய்ப்பு குறைவு.

மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு இஷாந்த் சர்மா, சிராஜ் என இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. இதில் யாரை தேர்வு செய்வதென்பதுதான் கோலிக்கு பெரிய சவாலாக இருக்கும். இஷாந்த் சர்மா அனுபவ வீரர். இங்கிலாந்து மைதானங்களில் 19 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 43 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். நியுசிலாந்துக்கு எதிராக 13 இன்னிங்ஸ்களில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

அனுபவம் Vs இளமை கோலியை குழப்பப் போகும் நம்பர் 11: இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? #WTCFinal

சிராஜுக்கு இப்படி ஒரு ரெக்கார்ட் கிடையாது. இங்கிலாந்தில் இப்போதுதான் முதன்முதலாக ஆடப்போகிறார். கோலி அனுபவத்துக்கு முன்னுரிமை கொடுத்தால் இஷாந்த் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் இருப்பார். ஆனால், இஷாந்த்தை விட சிராஜ் நல்ல தேர்வாக இருப்பார். இஷாந்த்க்கு அனுபவம் இருந்தாலும் அவர் ஒரு பரிமாண பௌலராகவே இருக்கிறார். பௌலிங் மெஷின் போல ஓடி வந்து ஒரே மாதிரியே வீசிக் கொண்டிருப்பார்.

சிராஜ் இந்த விஷயத்தில் கொஞ்சம் கெட்டிக்காரர். நியுபாலில் வித்தை காட்டுவார். ஷமியும் சிராஜும் முதல் ஸ்பெல்லில் க்ளிக் ஆகிவிட்டால் நியுசிலாந்து கதை க்ளோஸ். பழைய பந்திலும் அவரால் திறம்பட வீச முடியும்.

எல்லாவற்றுக்கும் மேல் இஷாந்திடம் இல்லாத ஒரு வெறியும் உந்துதலும் சிராஜிடம் இருக்கும். அது அசாத்தியமான பல விஷயங்களை செய்வதற்கு மூலதனமாக இருக்கும். இஷாந்த்க்கு பதில் சிராஜ் தேர்வு செய்யப்படுவது ஒரு கேம்பிள்தான். ஒரு வேளை சிராஜ் சொதப்பி போட்டி முடிவும் எதிர்மறையாக போனால் கோலியின் கேப்டன் பதவியே கேள்விக்குறியாகும்.

கொஞ்சம் வித்தியாசமாக அஷ்வின்/ ஜடேஜா இருவரில் ஒருவரை பென்ச்சில் வைத்துவிட்டு சிராஜ், இஷாந்த் சர்மா இருவரையும் அணியில் எடுப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், இதுவும் ஒரு ரிஸ்க் ஆன தேர்வாகவே இருக்கும். கோலி அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுப்பாரா? ரிஸ்க் எடுப்பாரா?? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories