விளையாட்டு

மீண்டும் ஆக்ரோஷத்தை கைக்கொள்ளும் விராட் கோலி: செய்தியாளரிடம் கொந்தளிப்பு- வைரலாகும் கோலியின் ஆவேச பேச்சு!

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வில்லியம்சன் ஆட்டமிழப்புக்கு களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது குறித்த செய்தியாளர் கேள்விக்கு விராட் கோலி பதிலளித்த விதம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஆக்ரோஷத்தை கைக்கொள்ளும் விராட் கோலி: செய்தியாளரிடம் கொந்தளிப்பு- வைரலாகும் கோலியின் ஆவேச பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதன்மூலம், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இந்திய அணி தவறவிட்டு ஒயிட்வாஷ் ஆனது. ஒருநாள் தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸையும் சேர்த்து 2,19, 3, 14 என மொத்தம் 38 ரன்களை மட்டுமே விராட் கோலி எடுத்து மோசமாக விளையாடினார். கோலி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய பேட்டிங் அணியுமே மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

இதனிடையே, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி விளையாடியபோது கேப்டன் வில்லியம்சன் 3 ரன்னில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வில்லியம்சனின் இந்த அவுட்டை, விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக களத்தில் கொண்டாடினார். வில்லியம்சன் ஆட்டமிழந்ததை அடுத்து ரசிகர்களை நோக்கி வாயில் கை வைத்தபடி, செய்கை செய்து வெளிப்படுத்தினார் கோலி.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் முகம்சுழிக்கச் செய்தது. ஒரு அணியின் கேப்டன் களத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு மாறாக கோலியின் இந்தச் செயல் இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கோலியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, கேப்டனாக முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள், இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொள்ளலாமா என வில்லியம்சனின் விக்கெட்டை கோலி கொண்டாடிய விதம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என பதில் கேள்வி எழுப்பினார் கோலி. மீண்டும் தனது கேள்வியை முன்வைத்த நிருபரிடம், “எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், அரைகுறையான கேள்வியுடனும், முழுமையற்ற தகவல்களுடன் வராதீர்கள். நீங்கள் விரும்பும் சர்ச்சையை ஏற்படுத்தும் இடம் இதுவல்ல” என ஆக்ரோஷமாகப் பதிலளித்தார்.

களத்தில் கோலியின் ஆக்ரோஷ கொண்டாட்டம், செய்தியாளர் சந்திப்பில் முறையற்ற வகையில் பதில் அளித்தல் என கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களுக்கு இந்த தருணங்கள் சற்றே அவர் மீது வருத்தம் ஏற்படும்படி அமைந்தன. சமீபகாலமாக களத்தில் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொள்ளாத கோலி, இந்தப் போட்டியில் இவ்வாறு நடந்து கொண்டது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories