விளையாட்டு

#T20WorldCup : நியூசிலாந்தை வீழ்த்தி 'த்ரில்' வெற்றி - அரையிறுதியை உறுதி செய்த இந்திய அணி!

மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. 

#T20WorldCup : நியூசிலாந்தை வீழ்த்தி 'த்ரில்' வெற்றி - அரையிறுதியை உறுதி செய்த இந்திய அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தை நியூசிலாந்துடன் விளையாடியது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இந்தியா தரப்பில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா 46 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

#T20WorldCup : நியூசிலாந்தை வீழ்த்தி 'த்ரில்' வெற்றி - அரையிறுதியை உறுதி செய்த இந்திய அணி!

134 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் 5 ஓவர்களிலேயே இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்டினர். நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமான அதிரடி பேட்ஸ்மேன் கேப்டன் டிவைன் 14 ரன்னில் ஆட்டமிழக்க, மற்ற வீராங்கனைகளும் சொற்ப ரன் சேர்த்து வெளியேறினர்.

இறுதிக்கட்டத்தில் 12 பந்துகளுக்கு 34 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழலில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் பவுண்டரியையும், சிக்சரையும் தாரைவார்த்தனர். இதனால், நியூசிலாந்து அணி 19 வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரி உள்பட 18 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை கிட்ட நெருங்கியது.

#T20WorldCup : நியூசிலாந்தை வீழ்த்தி 'த்ரில்' வெற்றி - அரையிறுதியை உறுதி செய்த இந்திய அணி!

கடைசி ஒரு ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற சூழலில் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜென்சன் பவுண்டரிக்கு பந்தை விரட்ட, அழுத்தம் அதிகரித்தது. கடைசி பந்துக்கு 5 ரன் தேவை என்ற நிலையில், நியூசிலாந்து அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்த இந்திய மகளிர் அணி, ஹாட்ரிக் வெற்றியுடன் கம்பீரமாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆட்டநாயகியாக 46 ரன்கள் சேர்த்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மா தேர்வானார்.

ஒட்டுமொத்தமாக T20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, 4வது முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. அரையிறுதியை உறுதி செய்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து வரும் 29ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது.

banner

Related Stories

Related Stories