இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, ஒன் டவுனில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, பொல்லார்டு வீசிய ஓவரில், தான் சந்தித்த முதல் பந்தில் ரோஸ்டான் சேஸிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் முதன்முறையாக டக்-அவுட் ஆகியுள்ள கோலி, மொத்தமாக தன்னுடைய 11 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் டக்-அவுட் ஆவது இது 13வது முறையாகும்.
அதேபோல், சேசிங்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பொல்லார்டு பேட்டிங் செய்யும்போது, ஷமி வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணி கேப்டன்களும் கோல்டன் டக்-அவுட் ஆகி மோசமான வரலாற்றைப் பதிவு செய்துள்ளது இதுவே முதன்முறையாகும்.