விளையாட்டு

ஜமைக்காவில் நடந்த சம்பவத்திற்கு ‘பதிலடி’ கொடுத்த விராட் கோலி - வைரலாகும் வீடியோ!

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜமைக்காவில் தன்னை கிண்டல் செய்த வில்லியம்ஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

ஜமைக்காவில் நடந்த சம்பவத்திற்கு ‘பதிலடி’ கொடுத்த விராட் கோலி - வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜமைக்காவில் தன்னை கிண்டல் செய்த வில்லியம்ஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக எட்டி, அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இந்த ஆட்டத்தில் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஜமைக்காவில் 2017ல் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 39 ரன்கள் எடுத்திருந்த போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறுவார். விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் வில்லியம்ஸ் நோட்புக்கில் கோலி பெயரை அழிப்பது போன்று வித்தியாசமான செய்கை செய்து கோலியை வெறுப்பேற்றினார்.

அதை மறக்காத கோலி நேற்று நடைபெற்ற போட்டியில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்துவிட்டு, வில்லியம்ஸ் செய்கையை கேலி செய்வது போன்று நோட்புக்கில் கையெழுத்து போடுவது போல சைகை செய்தார். கோலியின் இந்த பதிலடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய கோலி, “என் பேட்டிங்கை பார்க்கும் இளம் வீரர்களுக்கு ஒன்று சொல்கிறேன். என் இன்னிங்சின் முதல் பாதியை நீங்கள் பின்பற்ற வேண்டாம், அந்தப் பகுதியில் நான் மோசமாக பேட் செய்தேன். என்னால் ரன்களை விரைவாக எடுக்க முடியவில்லை.

நான் பந்துகளை விரட்டும் அதிரடி ஆட்டக்காரன் அல்ல; டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன். தாறுமாறு அடிதடி கிரிக்கெட் ஆடுவது என் நோக்கமல்ல. நானோ, ரோஹித்தோ கடைசி வரை நிற்கவேண்டியது அவசியம்.

ஜமைக்காவில் நடந்த சம்பவத்திற்கு ‘பதிலடி’ கொடுத்த விராட் கோலி - வைரலாகும் வீடியோ!

நான் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஆடுபவன். ஆனால், பெரிய இலக்கை விரட்டும்போது நிறைய கவனச்சிதறல்கள் ஏற்படுகிறது. ஸ்கோர் போர்டு அதில் ஒன்று. 4-5 டாட் பால்கள் விட்டால் அழுத்தம் அதிகரிக்கிறது. மீண்டும் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது சவாலாகிறது.

ஜமைக்காவில் வில்லியம்ஸ் என்னை ஆட்டமிழக்கச் செய்தபோது அவர் நோட்புக்கை எடுத்து என் பெயரை அழிப்பது போல் செய்தார். இன்று என் முறை. சிறப்பாக ஆடுவதைப் போலவே எதிரணி வீரர்களை மதிப்பதும் முக்கியம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories