இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார். விராட் கோஹ்லி 37 ரன்களை கடந்தபோது டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகளையும் சேர்த்து 20,000 ரன்களை கடந்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் (417) 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர்,பிரையன் லாரா இருவரும் 453 ஆட்டங்களில் 20,000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. இவர்களுக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 468 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்துள்ளார்.