விளையாட்டு

உலக கோப்பை 2019 : வங்கதேச அணி 330 ரன்கள் குவிப்பு !

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவிப்பு.

உலக கோப்பை 2019 : வங்கதேச அணி 330 ரன்கள் குவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற ஐந்தாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும், வங்கதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால், செளமியா சர்கார் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 50 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் 16 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 42 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினர். ஷகிப் அல் ஹசன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி புதிய சாதனை படைத்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி சார்பாக அதிக ரன் பார்ட்னர்ஷிப் போட்டி வீரர்கள் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் 75 (84) மற்றும் முஷ்பிகுர் ரஹிம் 78 (80) பெற்றுள்ளனர். இந்த ஜோடி 142 ரன்களை குவித்து அசத்தினர்.

முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னில் அவுட்டானார் அடுத்து களமிறங்கிய மொகமது மிதுன் 21, மொசாடெக் ஹூசைன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 46 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ, கிறீஸ் மாரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 331 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் தென்னாபிரிக்கா விளையாடி வருகிறது.

banner

Related Stories

Related Stories