அரசியல்

NDA முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெலுங்கு தேசம்! : Delimitation திட்டத்தை கைவிடுமா பா.ஜ.க.?

NDA முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெலுங்கு தேசம்! : Delimitation திட்டத்தை கைவிடுமா பா.ஜ.க.?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில் 10 ஆண்டிற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அதன் தொடர்ச்சி கடந்த 2021ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்டது.

அதற்கு கொரோனா பெருந்தொற்று தான் காரணம் என ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்ட நிலையில், பெருந்தொற்று நீங்கி நெடுங்காலம் ஆகியும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் நிலுவையிலேயே இருக்கிறது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு (2025) முதல் கணக்கெடுப்பிற்கான பணி தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கணக்கெடுப்பை அடுத்து மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்றம் (Delimitation) செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒன்றிய அரசின் அறிவிப்பை ஏற்று மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்து வரும் தென் மாநிலங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக மாறியுள்ளது.

காரணம், உலக அளவில் பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவிற்கு 7ஆம் இடமே இருந்தாலும், மக்கள் தொகையில் கணிப்புகளின் படி முதலிடம் பெற்றுள்ளது. இது போன்ற சூழல் தொடர்ந்தால், மக்கள் தொகை விழுக்காடே நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கருத்துகள் வலம் வரத்தொடங்கின. இதனையடுத்து, ஒன்றிய அரசின் அறிவிப்பை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகை விழுக்காட்டை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

NDA முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெலுங்கு தேசம்! : Delimitation திட்டத்தை கைவிடுமா பா.ஜ.க.?

ஆனால், அதற்கு முற்றிலும் மாறான நடவடிக்கையே வட மாநிலங்களில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை விழுக்காடு கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், அம்மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை, பட்டினி உள்ளிட்ட பல சுமைகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்காமல் கடமை தவறிய பா.ஜ.க மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை அதிகப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதுவே, Delimitation திட்ட முன்மொழிவாகவும் அமைந்துள்ளது.

இத்திட்டம் செயல்முறைக்கு வந்தால், தமிழ்நாடு பெற்றிருக்கிற 39 என்கிற மக்களவை நிகராளித்துவம் (பிரதிநிதித்துவம்), சுமார் 20 விழுக்காடு அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது. அதாவது 30 - 31 என்ற நிகராளித்துவத்தை பெறும் இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்படும்.

அதே வேளையில், இந்தியாவிலேயே அதிக அளவிலான மக்களவை நிகராளித்துவத்தை பெற்றிருக்கிற உத்தரப் பிரதேசம் மாநிலம், தற்போது பெற்றிருக்கிற 80 உறுப்பினர்களை விட சுமார் 10 உறுப்பினர்களை அதிகமாக பெற்று, 90க்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெறும்.

இந்த எண்ணிக்கை, தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாற்றப்படாமல் இருந்தால் தான். ஒரு வேளை, 543ஆக இருக்கும் மொத்த மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை, 848 ஆக உயர்ந்தால் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சுமார் இரட்டிப்பு நிகராளித்துவத்தைப் பெறுவார்கள்.

NDA முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெலுங்கு தேசம்! : Delimitation திட்டத்தை கைவிடுமா பா.ஜ.க.?

அதாவது, NDA ஆட்சி வகிக்கும் பீகார் மாநிலம், 40இலிருந்து 79 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட மாநிலமாக மாறும். பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தின் நிகராளித்துவம் 80இலிருந்து 143ஆக உயரக்கூடும்.

இது போன்ற சூழலின் காரணமாக, தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் நிலையை அடைவதால், NDA கூட்டணி ஆட்சி வகிக்காத தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலங்கானா மாநிலங்கள், Delimitation-க்கு எதிரான தங்களது கண்டனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், Delimitation-க்கு எதிரான முன்மொழிவில், இணையாதிருந்த ஒற்றை மாநிலமான ஆந்திரப்பிரதேசமும், தற்போது எதிர்ப்பில் ஒன்றிணைந்துள்ளது.

குறிப்பாக, Delimitation என்ற தென்னகத்தை வஞ்சிக்கும் திட்டத்தை எதிர்த்து, ஆந்திராவில் ஆட்சி கொண்டிருக்கும் NDA கூட்டணியின் முதன்மை கட்சியான தெலுங்கு தேசமும் இணைந்துள்ளது, பா.ஜ.க.விற்கு தகுந்த அடியாகவே மாறியுள்ளது.

இது குறித்து தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லாவு ஸ்ரீ கிருஷ்ணா தேவராயலு தெரிவித்திருப்பதாவது, “Delimitation திட்டத்தின் வரையறை மாற்றியமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பு, Delimitation குறித்து மாநிலங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் ஒன்றிய அரசு கேட்டுணர வேண்டும்.

NDA முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெலுங்கு தேசம்! : Delimitation திட்டத்தை கைவிடுமா பா.ஜ.க.?

எக்காரணம் கொண்டும், ஆந்திரப் பிரதேசம் அதன் அரசியல் நிகராளித்துவத்தை இழக்க தயாராக இல்லை. நாட்டிற்காக மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்தோம் என்பதற்கான தண்டனையாகவே, Delimitation உணரப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே, இந்திய நாளுமன்றத்தில் மாநிலங்களுக்கான நிகராளித்துவம் அமைய வேண்டும் என்று இருக்கிறது என்பதையும், தற்போது சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் இல்லாவிட்டால் பா.ஜ.க தனது பெரும்பான்மையை நிரூபிக்க இயலாமல் இருந்திருக்கும். அதே வேளையில், NDA கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகினால், பா.ஜ.க ஆட்சியே சிதைவடையும் உள்ளிட்ட காரணங்களால், Delimitation-க்கு எதிராக தெலுங்கு தேசம் கருத்து தெரிவித்திருப்பது, Delimitation திட்டத்திற்கு மாபெரும் அடியாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories