அரசியல்

உங்கள் துரோகத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் - தமிழிசையை விமர்சித்த துணை முதலமைச்சர் !

உங்கள் துரோகத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் - தமிழிசையை விமர்சித்த துணை முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவதாகவும், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்துகொள்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னர் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அதில் " தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி வேண்டும் என்றே திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

உங்கள் துரோகத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் - தமிழிசையை விமர்சித்த துணை முதலமைச்சர் !

இந்த சம்பவம் குறித்துப் பேசிய முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், " சென்னை தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் முறையை பார்த்தாலே பாடுபவர்கள் போதுமான பயிற்சியின்றி தவறாக பாடுகிறார்களே தவிர உள்நோக்கத்தோடு திராவிடத்தை தவற விட்டு பாடுவதாக தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவரின் இந்த கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், " இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!

அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ’கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ’சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்!

ஓடாதத் தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!

‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!

நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.

ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories