அரசியல்

இஸ்லாமியர் கட்டுமானங்களை இடிக்க இடைக்கால தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இஸ்லாமியர் கட்டுமானங்களை இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர் கட்டுமானங்களை இடிக்க இடைக்கால தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி பாஜக மற்றும் அதனை எதிர்க்கும் பொதுமக்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் வழக்கம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் தொடங்கிய இந்த நடைமுறை பாஜக ஆளும் மாநிலங்களிலும் பரவியது. இதுவரை ஏராளமான இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் மசூதி, தர்காக்கள் இதுபோன்ற புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர் கட்டுமானங்களை இடிக்க இடைக்கால தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

பாஜக அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து, இது போன்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி குஜராத் மாநிலத்தில் இஸ்லாமிய கட்டுமானங்கள் இடிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் 5 தர்கா, 25 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு கண்டறியப்பட்டால் மீண்டும் மசூதிகளை கட்ட உத்தரவிடப்படும் என்று தெரிவித்தனர். பின்னர், இஸ்லாமியர் கட்டுமானங்களை இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories