அரசியல்

PM SHRI மூலம் மாணவர்களின் உள்ளத்தில் பாஜகவின் ஆபத்து கொள்கைகளை பரப்ப முயற்சி : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

மாணவர்களின் உள்ளத்தில் பா.ஜ.க-வின் ஆபத்து கொள்கைகளை பரப்ப முயற்சி நடப்பதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

PM SHRI மூலம் மாணவர்களின் உள்ளத்தில் பாஜகவின் ஆபத்து கொள்கைகளை பரப்ப முயற்சி : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கல்வியில், RSS கொள்கைகளை புகுத்த ஒன்றிய பா.ஜ.க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படிதான் நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது. புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து, 3 ஆம் வகுப்பில் இருந்தே பொதுத் தேர்வு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

மேலும் புதிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குளக்கல்வியை போதிக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனால் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால்தான் சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு கூறி வருகிறது. தமிழ்நாட்டிற்கு தரவ வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது.

அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை உடனே வழங்க வேண்டும் என வலியுத்தினார். மேலும் புதிய கல்விக் கொள்கையை விட தமிழ்நாட்டின் கல்வி கொள்கை சிறப்பானது எனவும் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத் போன்ற பா.ஜ.கவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கைக்கு அனுப்பியுள்ளது.

இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். CPI(M) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,”மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல. பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், ஆசிரியர்/மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டும்” என கண்டித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories