அரசியல்

"எங்களுக்கான நேரம் வரும், அப்போது திருப்பி கொடுப்போம்" - பாஜகவுக்கு சந்திரசேகர ராவ் மகள் எச்சரிக்கை !

"எங்களுக்கான நேரம் வரும், அப்போது திருப்பி கொடுப்போம்" - பாஜகவுக்கு சந்திரசேகர ராவ் மகள் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சியில் இழுத்து வருகிறது. எதிர்கட்சிகளை மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் தங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறது. இதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தும் இருக்கிறது.

அப்படி தங்கள் கூட்டணியில் சேர மறுப்பவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து கைது செய்து அவர்கள் கட்சியை மிரட்டி வருகிறது. அண்ட் வகையில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகல் கவிதாவை டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.

தொடர்ந்து அவர் சிறையில் இருக்கும்போதே சிபிஐ-யும் அவரைக் கைதுசெய்து அவர்மீது வழக்கு பதிவுசெய்தது.இந்த இரண்டு வழக்கிலும் அவர் சுமார் 5 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனடியே அவர் ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

"எங்களுக்கான நேரம் வரும், அப்போது திருப்பி கொடுப்போம்" - பாஜகவுக்கு சந்திரசேகர ராவ் மகள் எச்சரிக்கை !

அதில், அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் விசாரணையை முடித்துவிட்டதால், அவரை காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி கவிதாவுக்கு ஜாமின் விலகி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அவர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவிதா, "இந்த வழக்கை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம். எங்கள் கட்சியை உடைக்கமுடியாததால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். நான் நிரபராதி என்பதை நிச்சயம் நிரூபிப்பேன். என்னையும் எனது குடும்பத்தையும் இதில் சிக்கவைத்தவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பேன். எங்களுக்கான நேரம் விரைவில் வரும்"என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories