சினிமா

நாட்டையே உலுக்கும் பாலியல் புகார்கள்... கேள்விகேட்ட பத்திரிகையாளரை தாக்கிய ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி !

மலையாள திரையுலகில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து கேள்விகேட்ட பத்திரிகையாளரை நடிகரும் ஒன்றிய இணையமைச்சருமான சுரேஷ் கோபி தாக்கிய சம்பவத்தால் அதிர்ச்சி !

நாட்டையே உலுக்கும் பாலியல் புகார்கள்... கேள்விகேட்ட பத்திரிகையாளரை தாக்கிய ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை சில காரணமாக வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் வெளியானது. சுமார் 233 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கும் பாலியல் புகார்கள்... கேள்விகேட்ட பத்திரிகையாளரை தாக்கிய ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி !

மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் வாய் திறந்தால், அவர் பிரச்னைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை கேரள சினிமா துறையை தாண்டி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல மாநிலங்களில் இதுபோல் குழு அமைத்து விசாரிக்க நடிகைகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து பிரபல மலையாள நடிகரும் ஒன்றிய பாஜக இணையமைச்சருமான சுரேஷ் கோபியிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அப்போது அவர் கார் அருகே சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கையில், ஆத்திரமடைந்த சுரேஷ் கோபி, அங்கிருந்த செய்தியாளர் ஒருவரை தாக்கினார்.

நாட்டையே உலுக்கும் பாலியல் புகார்கள்... கேள்விகேட்ட பத்திரிகையாளரை தாக்கிய ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி !

நடிகரும் ஒன்றிய பாஜக இணையமைச்சருமான சுரேஷ் கோபி செய்தியாளரை தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. மேலும் அவர், "இந்த விஷயம் உங்களுக்கு ஒரு தீனி. சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை தவறாக வழி நடத்துகிறீர்கள். இதை வைத்து பணம் சம்பாதிக்கிறீர்கள். நாட்டில் எத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, இதை மேலும் பெரிதுபடுத்துகிறீர்கள்" என்று கேள்விக்கு பதிலளிக்காமல் கடுமையாக நடந்துகொண்டார்.

சினிமாவில் பிரபலமாவதற்கு இதே ஊடகம் தேவை, ஆனால் அதுவே ஒரு பிரச்னை என்றால், ஊடகம் அதை பெரிதாக ஆக்கி பணம் சம்பாதிக்க நினைப்பது எந்த விதத்தில் சரி, என்று பலரும் கேள்விகளால் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த பாலியல் புகாரில் பிரபல நடிகர் சித்திக் மீது, நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் தெரிவித்த நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து வங்காள நடிகை பாலியல் புகார் தெரிவித்த நிலையில், கேரள திரைப்பட அகாடமியில் இருந்து ராஜினாமா செய்தார் பிரபல இயக்குநர் ரஞ்சித்.

தொடர்ந்து அடுத்தடுத்து என ஜெயசூர்யா உள்ளிட்ட நடிகர்கள் மீது, நடிகைகள் பாலியல் புகாரை தொடர்ந்து அடுக்கடுக்காக வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories