அரசியல்

அதானியை தாங்கிப்பிடிக்கும் பா.ஜ.க : இந்திய பொருளாதாரத்தின் பிரதிநிதி அதானியா?

அதானி மீது நடவடிக்கை தேவை என்பது இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து என்றவாறு சர்ச்சையாக பேசியுள்ளார் ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு!

அதானியை தாங்கிப்பிடிக்கும் பா.ஜ.க : இந்திய பொருளாதாரத்தின் பிரதிநிதி அதானியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களை விடவும், இந்திய முதன்மை அதிகாரிகளை விடவும், பெரும் அதிகாரம் படைத்தவராக அதானி திகழ்கிறார்.

அதானி மீது உலக ஊடகங்கள் அனைத்தும் குற்றச்சாட்டு வைத்தாலும், கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றச்சாட்டு வைத்தாலும், பொருளாதார வல்லுநர்கள் குற்றச்சாட்டு வைத்தாலும், ஒன்றிய பா.ஜ.க.வினரின் ஆதரவு அதானிக்கானதாகவே இருக்கிறது.

அதற்கு, ஹிண்டன்பர்க் எதிரொலியே எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. 18 மாதங்களுக்கு முன்பு, அதானியின் பங்குகளில் பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன என அமெரிக்க ஆய்வு நிறுவனம் சான்றுகளுடன் வெளிப்படுத்தியும், அதனை ஒன்றிய பா.ஜ.க ஏற்க முன்வரவில்லை.

மாற்றாக, “அதானிக்கு எதிரான நடவடிக்கை வேண்டும்” என முன்மொழிந்த மக்கள் பிரதிநிதிகளின் பதவியை தான் பறித்தது. சிலர் சிறைக்குள்ளும் தள்ளப்பட்டனர்.

அதற்கு, தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்திரா, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரும் விலக்கு இல்லை.

இந்நிலையில், 18 மாதங்களுக்கு பிறகு, அதானி மோசடி குறித்து விசாரிக்கும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தலைவரும் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர் தான் என்ற மற்றொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்.

இதனால், எதிர்க்கட்சிகளும், பொருளாதார வல்லுநர்களும், அதானி மோசடி வழக்கை, சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும், மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

எனினும், அதற்கு வழக்கம் போல் செவி சாய்க்காத ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமை பொறுப்பினர், நீதி வேண்டும் என்பவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அவ்வகையில், ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்திய பொருளாதாரத்தை சிதைக்க, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைகள் நடக்கின்றன” என்ற சர்ச்சைக் கருத்தை முன்வைத்துள்ளார்.

இதனால், “அதானியை குறிவைத்தால், இந்திய பொருளாதாரம் ஏன் சிதைகிறது? அப்போது, இந்திய பொருளாதாரம் என்பது அதானியாலும், அவரை சார்ந்தவர்களாலும் மட்டுமா இயங்குகிறது” என்ற கேள்விகள் வலுக்கத்தொடங்கியுள்ளன.

தேர்தல் பத்திரங்களில் பா.ஜ.க.வின் பெரும் நன்கொடையாளராக அதானி விளங்கியதன் காரணமாகத்தான், இந்திய பொருளாதாரத்தின் பிரதிநிதியாக்கப்பட்டுள்ளாரா அதானி? என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories