அரசியல்

முரணை வளர்த்த பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை : உத்தவ் தாக்கரே திட்டவட்டம்!

மகாராஷ்டிர மாநில அரசியல் கட்சிகளை துண்டுகளாக்கிய பா.ஜ.க. இரு கட்சிகள், 4 கட்சிகளானதால் தொண்டர்களிடம் தொடரும் ஏமாற்றம்.

முரணை வளர்த்த பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை : உத்தவ் தாக்கரே திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும், உத்தரப் பிரதேசத்திலும் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி, மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

அவ்வாறு, திருப்பு முனையாக அமைந்த மாநிலங்களின் வரிசையில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக இருக்கும் மாநிலம் தான் மகாராஷ்டிரா.

இந்தியாவிலேயே, உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக, மக்களவையில் அதிக உறுப்பினர் வலு கொண்ட மாநிலமும் மகாராஷ்டிரம் தான்.

அவ்வாறான ஒரு மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு இணையான மாபெரும் மக்கள் ஆதரவு கொண்ட கட்சிகளாக விளங்கியது தான் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும்.

ஆனால், அவ்வாறு மாநில கட்சிகள் வளர்வதை விரும்பாத பா.ஜ.க, சிவசேனா கட்சியுடனும், தேசியவாத காங்கிரஸுடனும் கூட்டணி வைப்பது போல், வைத்து,

முரணை வளர்த்த பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை : உத்தவ் தாக்கரே திட்டவட்டம்!

சிவசேனா கட்சியை சிவசேனா (தாக்கரே) என்றும், சிவசேனா (ஷிண்டே) என்றும் பிரித்ததோடு மட்டுமல்லாமல்,

தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) என்றும் பிரித்து,

வாக்கு வங்கியை தன் பக்கம் ஈர்க்க முயன்றது பா.ஜ.க.

எனினும், அதனை எதிர்த்து, இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனா (தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) பெருமளவில் வெற்றி பெற்றி, பா.ஜ.க.வின் மூக்கை உடைத்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா (தாக்கரே) கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே, “ஒரு தாயின் பிள்ளையாய், ஒரே குடும்பமாய் இருந்த எங்கள் கட்சி தொண்டர்களை பிரித்த பா.ஜ.க.வுடன், இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், மக்களவை தேர்தலில் பெற்ற அடிகளுக்கே காயம் ஆராத நிலையில், மற்றொரு பலத்தடி பா.ஜ.க.வின் மீது விழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories