இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் எனப்படும் DD தற்போது பல்வேறு மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொதிகை என்ற பெயரில் தமிழில் சேவைகளை வழங்கி வந்த தூர்தர்ஷனின் பெயர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் DD தமிழ் என மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் தூர்தர்ஷன் நிறுவனத்தின் செய்தி தொலைக்காட்சியான DD News லோகோவின் நிறத்தை காவி நிறமாக மாற்றியது. இவர் தூர்தர்ஷன் நிறுவனம் தொடர் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் த்தைகளை பயன்படுத்த தூர்தர்ஷன் நிர்வாகம் தடை விதித்திருக்கிறது என்பது சர்ச்சையாகி இருக்கிறது. டெல்லி தூர்தர்ஷன் டிவி சேனல் ஸ்டுடியோவில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் வீடியோ உரை பதிவு செய்யப்பட்டது.
அப்போது அவர் இஸ்லாமியர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியபோது அதனை பயன்படுத்த வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து தூர்தர்ஷன் நிர்வாகத்துக்கு சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.
திவால், இஸ்லாமியர், சர்வாதிகார ஆட்சி, கொடூர சட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடக் கூடாது என்கிறது தூர்தர்ஷன் நிர்வாகம். இது சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்துகிறது" என கூறியுள்ளார். இதே போல் மற்றும் சில அரசியல் தலைவர்களுக்கும் இதுபோல தூர்தர்ஷன் நிர்வாகம் இதே போல இஸ்லாமியர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.