நார்வே நாட்டில் நார்ஜெஸ் வங்கி உள்ளது. இந்த வங்கி உலகில் இருக்கும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி 1.7 ட்ரில்லியன் டாலர்களுக்கு முதலீடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் நார்ஜெஸ் வங்கி அதானி துறைமுகம் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி இருந்தது.
இதையடுத்து அதானி துறைமுக நிறுவனம் ரூ.150 மில்லியன் டாலர்களுக்கு மியான்மர் நாட்டில் முதலீடு செய்துள்ளது. இது குறித்து நார்ஜெஸ் வங்கி அதானி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மியான்மர் ராணுவ புரட்சிக்கு அதானி நிறுவனம் உதவியுள்ளதாக நார்ஜெஸ் வங்கி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது. மேலும் தங்களது முதலீடுகளை திரும்ப பெறுவதாக நார்ஜெஸ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை இதற்கான விளக்கத்தை அதானி நிறுவனம் வழங்காமல் உள்ளது.
அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மியான்மர் ராணுவ புரட்சிக்கு அதானி நிறுவனம் உதவியுள்ளதாக நார்ஜெஸ் வங்கியும் குற்றச்சாட்டை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.