கடந்த 10 ஆண்டுகளில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, கலவரம், சிறுபான்மையினர் உரிமை பறிப்பு ஆகியவற்றை அதிகரித்து, தோல்வியுற்ற அரசிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது பா.ஜ.க.
ஆதலால், எதிர்க்கட்சி தலைவர்கள், பொது மக்கள் என அனைவரின் கண்டனங்களுக்கும் ஆளாகி வருகின்றனர் பா.ஜ.க.வினர்.
எனினும், திசை திருப்பல்களுக்கு பெயர்போன பா.ஜ.க கட்சி, தாங்கள் உருவாக்கிய சிக்கல்களையையே, பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
அவ்வகையில், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம், வறுமை ஆகியவை அதிகரிக்கும்” என அப்பட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், 55 இலட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன் தொகை, 150 இலட்சம் கோடி அதிகரித்து, 205 இலட்சம் கோடியாக உயர்ந்ததற்கு காரணமாக இருக்கிற பா.ஜ.க, நாட்டின் பட்டினி விகிதத்தையும் அதிகரித்துள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு, எண்ணற்ற சிறுபான்மையினர்கள் இருப்பிடங்களை விட்டு நாடோடிகளாக்கப்பட்டது அனைத்தும் கூட மோடி ஆட்சியில் நிகழ்ந்தவையே.
இவ்வாறு கலவரம், வறுமை என்ற செயல்முறையை, இந்தியாவின் அங்கமாக்கிய பா.ஜ.க, தங்களை காத்துக்கொள்ள எதிர்க்கட்சிகளின் மீது பொய்ப்பழி சுமத்தி வருவதற்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.