அரசியல்

பிரச்சாரத்துக்காக மணிப்பூர் செல்லும் அமித்ஷா : டயர்களுக்கு தீவைத்து பொதுமக்கள் எதிர்ப்பு !

தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் செல்லும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிரச்சாரத்துக்காக மணிப்பூர் செல்லும் அமித்ஷா :  டயர்களுக்கு தீவைத்து பொதுமக்கள் எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது. இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை. இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் செல்லும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மணிப்பூரில் உள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு 19 மற்றும் 26 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று மணிப்பூர் செல்லும் அமித்ஷாவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரச்சாரத்துக்காக மணிப்பூர் செல்லும் அமித்ஷா :  டயர்களுக்கு தீவைத்து பொதுமக்கள் எதிர்ப்பு !

சாலைகளில் டயர்களுக்கு தீவைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். பல இடங்களில் பாஜக வாகனங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.பல இடங்களில் சாலைகளை தடுப்பு ஏற்படுத்தியும் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய கலவரம் 11 மாதங்கள் ஆகியும் இன்னும் ஓயாத நிலை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குக்கி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களை உறவினர்கள் இடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

banner

Related Stories

Related Stories