தமிழ்நாடு

“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !

ரூ.1.45 லட்சம் கோடி கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகாலமாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதில் குறிப்பாக GST வரியை விதித்து மக்களை பெரும் துன்பத்தில் கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வரியால் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் எளிதாக வாங்கும் கடலைமிட்டாய் உள்ளிட்டவைக்கும், அத்தியாவசிய பொருளான சானிட்டரி நாப்கினுக்கும் பல சதவீத GST வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வைரம், ஆடம்பர கார்கள் உள்ளிட்டவைக்கு மிகவும் கம்மியான சதவீத GST வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இப்படி பெரும் கஷ்டம் கொடுக்கும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !

இதுகுறித்து வெளியான சமூக வலைதள பதிவு வருமாறு :

“GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.

ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியாவுக்கு வாக்களியுங்கள்.

banner

Related Stories

Related Stories