அரசியல்

"நம் முதல்வர் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர் என்ற நிலையை உருவாக்கவேண்டும்" - தயாநிதிமாறன் எம்.பி !

நம் முதல்வர் கைகாட்டுபவரே அடுத்த பிரதமராக இருக்கக்கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும் என தயாநிதிமாறன் எம்.பி கூறியுள்ளார்.

"நம் முதல்வர் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர் என்ற நிலையை உருவாக்கவேண்டும்" - தயாநிதிமாறன் எம்.பி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள தம்புச்சட்டி தெருவில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தயாநிதிமாறன் எம்.பி, "கயவர்களால் கைப்பற்றப்பட்டு வைத்துள்ள கோவில் நிலங்களை மீட்டு கோவிலுக்கு மீண்டும் கொடுப்போம். நம் அனைவருக்கும் ஏன் திமுக மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பாசம் உள்ளது என்றால் அதற்கு ஒரே காரணம் தமிழ். அப்படிப்பட்ட தமிழை காப்பாற்ற வேண்டிய முக்கியமான நிலையில் இன்று நாம் உள்ளோம். நாம் எந்த மொழிக்கும் எதிராக இல்லை. மாறாக எந்த ஒரு மொழியும் திணிக்க கூடாது என்று தான் நாம் குறிக்கோளாக உள்ளோம்.

இந்தி எனும் மொழியை கொண்டு வந்து இந்தியாவில் பேசப்பட்டு வந்த பழ மொழிகளை அழித்துவிட்டார்கள். பாராளுமன்றத்தில் ஆங்கிலம் தெரிந்தும், இந்தியில் மட்டுமே உரையாடுவார்கள். ஏனெனில் அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் இந்தி மட்டுமே பேசுகிறார்கள். இந்தியாவின் முதல் செம்மொழி எதுவென்றால் அது தமிழ்மொழிதான். அந்த பெருமையை கொண்டு வந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்.

"நம் முதல்வர் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர் என்ற நிலையை உருவாக்கவேண்டும்" - தயாநிதிமாறன் எம்.பி !

தமிழை செம்மொழியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்த பொழுது பிற மொழிகளைச் சார்ந்தவர்களும் தங்கள் மொழிகளையும் செம்மொழியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதற்கு தமிழ் மொழியைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் அத்தனையும் திராவிட மொழிகள்தான் என்றும் அவற்றையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் ஆலோசனை கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்.

நமது இந்திய பொருளாதாரம் காங்கிரஸ் கட்சியை சார்பில் மன்மோகன் சிங் ஆட்சி புரிந்த பொழுது அதீத வளர்ச்சி அடைந்திருந்தது. மன்மோகன் சிங் காலத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி பாஜக சார்பில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று பெரிய அளவில் உயரவில்லை. இந்தியா கூட்டணி இந்திய அரசினை வெல்லுகின்ற வாய்ப்பு அருமையாக உள்ளது.

அடுத்த பிரதமர் யார் என்று நம் முதல்வர் கைகாட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக இருக்கக்கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு இயற்கை பேரிடர் சீட்டங்கள் ஏற்பட்ட தருவாயில் கூட வராத பிரதமர் வாக்கிற்காக மட்டுமே தற்பொழுது வந்து கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்தார்.

banner

Related Stories

Related Stories