அரசியல்

"டெல்லியிடம் கேட்டு பதவியை பெறுவதை விட செத்து மடிவதே மேல்" - ம.பி முன்னாள் முதல்வர் கருத்தால் அதிர்ச்சி !

டெல்லிக்கு சென்று எதையும் கேட்டு பெறுவதை விட செத்து மடிவதே மேல் என சிவ்ராஜ் சிங் சௌகான் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

"டெல்லியிடம் கேட்டு பதவியை பெறுவதை விட செத்து மடிவதே மேல்" - ம.பி முன்னாள் முதல்வர் கருத்தால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி மிசோரத்தை தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 163 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் முதலமைச்சர் தேர்வில் கடும் இழுபறி நீடித்தது. அம்மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த சிவ்ராஜ் சிங் சௌகான், ஒன்றிய அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமர், ஜோதிராதித்திய சிந்தியா ஆகியோர் முதல்வர் பதவிக்கு கடுமையாக முயன்று வந்தனர்.

இதன் காரணமாக முதலமைச்சர் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் என்பவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பின் காரணமாக சிவ்ராஜ் சிங் சௌகான் கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது.

"டெல்லியிடம் கேட்டு பதவியை பெறுவதை விட செத்து மடிவதே மேல்" - ம.பி முன்னாள் முதல்வர் கருத்தால் அதிர்ச்சி !

இந்த நிலையில் டெல்லிக்கு சென்று எதையும் கேட்டு பெறுவதை விட செத்து மடிவதே மேல் என சிவ்ராஜ் சிங் சௌகான் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், " ஒரு விஷயத்தை என் தரப்பிலிருந்து நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எதையும் எதிர்பார்ப்பு நிற்பதை விட செத்து மடிவதே மேல். எதன் காரணமாகவும் டெல்லி செல்ல மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

இதே போல பதவி கிடைக்காததால் ஒன்றிய அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமர், ஜோதிராதித்திய சிந்தியா ஆகியோரும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இதில் ஜோதிராதித்திய சிந்தியா முதலவர் பதவி கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories