அரசியல்

IIT, மத்தியப் பல்கலை.யில் இருந்து பாதியில் நிற்கும் SC,ST,OBC மாணவர்கள்.. புள்ளிவிவரத்தால் அதிர்ச்சி !

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி நிறுவனங்களில் இருந்து அதிக அளவில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் இடையில் படிப்பை நிறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

IIT, மத்தியப் பல்கலை.யில் இருந்து பாதியில் நிற்கும் SC,ST,OBC மாணவர்கள்.. புள்ளிவிவரத்தால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலும் உயர்சாதியினரே கல்வி கற்று வரும் நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.

அதிலும், சமீப காலமாக அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களின் தற்கொலை என்பது தொடர் கதையாக வருகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்ளில் ஆசிரியர் பணியிடங்களில் பெரும்பாலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலையில், அங்கு உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.

இதுவும் அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்கள் நுழைய முடியாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி நிறுவனங்களில் இருந்து அதிக அளவில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் இடையில் படிப்பை நிறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

IIT, மத்தியப் பல்கலை.யில் இருந்து பாதியில் நிற்கும் SC,ST,OBC மாணவர்கள்.. புள்ளிவிவரத்தால் அதிர்ச்சி !

மாநிலங்களவையில், ஷில் குமாரின் கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அரசு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி நிறுவனங்களில் இருந்து டந்த 5 ஆண்டுகளில் , எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 25,593 மாணவர்கள் வெளியேறியுள்ளானர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதிலும், 2019 மற்றும் 2023 க்கு இடையில் இதுவரை, மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து 17,545 மாணவர்களும், ஐஐடியில் இருந்து 8,139 மாணவர்களும் வெளியேறியுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2019-ல் 2,152 ,2021-ல் 2,411, 2022-ல் 1,746 ஆகவும் இருந்துள்ளது. இந்த இடைநிற்களுக்கு அரசு பணிகளில் சேர மாணவர்கள் வெளியேறியதே காரணம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளபோதிலும், உண்மை காரணம் என்ன ? என்பது அனைவர்க்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories