அரசியல்

அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்.. குடியரசு தலைவர் அலுவலகத்தின் பதிலால் பரபரப்பு.. பின்னணி என்ன ?

அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயமாகியுள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ள கருத்து இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்.. குடியரசு தலைவர் அலுவலகத்தின் பதிலால் பரபரப்பு.. பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் தான் தற்போது வரை இந்திய நாட்டை வழிநடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அல்ல என்றாலும் அம்பேத்கரின் திறமையை அறிந்த நேரு அவரை சட்ட அமைச்சராக நியமித்து அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற முழு அதிகாரம் வழங்கினார்.

தான் ஏற்றுக்கொண்ட கடமையை வெற்றிகரமாக முடிந்த அம்பேத்கர் உலகமே வியக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிமுடித்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு, மதச்சார்பற்ற தன்மை என்ற இந்திய அரசியலின் மையப்புள்ளியாக அம்பேத்கர் தற்போதுவரை திகழ்ந்து வருகிறார்.

அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்.. குடியரசு தலைவர் அலுவலகத்தின் பதிலால் பரபரப்பு.. பின்னணி என்ன ?

எனினும் காங்கிரஸ் கட்சியோடு ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக அம்பேத்கர் தனது அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தற்போது பிரஷாந்த் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலர் மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளரிடம் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் குறித்து விவரம் தருமாறும் அம்பேத்கர் என்ன காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்தார் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அம்பேத்கர் கடந்த 1951ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ராஜினாமா செய்ததாகவும், வேறு எந்த தகவலும் இந்த கோரிக்கைக்கு தங்களிடம் இல்லை என்று அமைச்சரவை செயலகம் விளக்கம் அளித்தது. அதனைத் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் நிச்சயம் பிரதமரின் செயலகத்தில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக விளக்கமளிக்கும் படியும் பிரஷாந்த் மத்திய தகவல் ஆணையத்திடம் மீண்டும் முறையிட்டுள்ளார்.

அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்.. குடியரசு தலைவர் அலுவலகத்தின் பதிலால் பரபரப்பு.. பின்னணி என்ன ?

ஆனால், அரசியலமைப்புச்சட்ட விவகாரங்கள் பிரிவில் நீண்ட நேரம் தேடியும் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை என குடியரசுத் தலைவரின் செயலகம் பிரஷாந்துக்கு பதிலளித்துள்ளார். இதன் மூலம் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories