இந்தியா

உடல்நிலை சரியில்லாத தந்தை.. 3 கி.மீ தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்ற 6 வயது சிறுவன்: ம.பியில் அவலம்!

உடல்நிலை சரியில்லாத தந்தையைத் தள்ளுவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு 10 வயது சிறுவன் தள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நிலை சரியில்லாத தந்தை.. 3 கி.மீ  தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்ற 6 வயது சிறுவன்: ம.பியில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா சுகாதாரத்துறையில் வளர்ச்சி பெற்று இருந்தாலும் இந்தியாவில் போதிய சுகாதார வசதி இன்னும் இல்லை என்பதை அவ்வப்போது சமூக ஊடகத்தில் வெளியாகும் வீடியோக்கள் உணர்த்துகிறது.

உடல்நிலை சரியில்லாத தந்தை.. 3 கி.மீ  தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்ற 6 வயது சிறுவன்: ம.பியில் அவலம்!

அண்மைக்காலமாக இறந்தவர்கள் உடல்களை மருத்துவமனையில் இருந்து எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருசக்கர வாகனத்திலும், ஆட்டோவிலும், தோளில் சுமந்து செல்வதுபோன்ற வீடியோக்கள் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் இறந்த தனது மனைவி உடலை ஒடிசாவிற்குத் தோளில் சுமந்து சென்ற கணவனுக்கு போலிஸார் உதவி செய்த சம்பவம் நடந்துள்ளது.

தற்போது மத்திய பிரதேச மாநிலம் சிங்கராலியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையை 6 வயது சிறுவன் ஒருவன் தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனின் தந்தை உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் வசதிக்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவன் தனது தாய் உதவியுடன் தந்தையை தள்ளுவண்டி ஒன்றில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு தள்ளிச் சென்று சிகிச்சையில் சேர்த்துள்ளான்.

இது குறித்து சிங்கராலி கூடுதல் ஆட்சியர், 'ஆம்புலன்ஸ் இல்லாத காரணம் குறித்துக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து சுகாதாரத்துறையில் பா.ஜ.க அரசின் அலட்சியமே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories